பச்சை மிளகாய் செடியில் அதிக காய்கள் காய்க்க
நாம் செய்யும் அன்றாட உணவுகளில் பச்சை மிளகாய் இல்லாமல் சமைக்க முடியாது. இருந்தாலும் இதனை கடையில் தான் வாங்கி வருவோம். கடையில் பச்சை மிளகாயை வாங்கி வந்தாலும் நாள்பட பயன்படுத்த முடியாது. 10 நாட்களில் அழுகி போகிவிடும். அதனால் இதனை வீட்டில் வளர்ப்பது சிறந்த ஒன்றாகும். ஆனாலும் இதனை வீட்டில் வளர்த்தாலும் காய்கள் காய்க்க மாட்டிக்கிறது என்று கவலைப்படுபவர்கள் ஏராளமானோர். அதனால் தான் இந்த பதிவில் பச்சை மிளகாய் செடியில் அதிக காய்கள் காய்க்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பச்சை மிளகாய் செடி வளர்க்கும் முறை:
உகந்த மாதம்:
பச்சை மிளகாய் செடியை வெயில் காலத்தில் நன்றாக வளராது. ஆகவே இதனை ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடவு செய்தால் சிறந்த ஒன்றாக இருக்கிறது.
கருவேப்பிலை செடி செழிப்பாக வளர என்ன செய்யலாம்.
ஏற்ற மண்:
பச்சை மிளகாய் செடிக்கு செம்மண் உகந்ததாக இருக்கும். அது போல செடிகளை இடைவெளி விட்டு நட வேண்டும். ஏனென்றால் பச்சை மிளகாய் செடிக்கு காற்றோட்டம் ரொம்ப முக்கியமானது.
உரம்:
பச்சை மிளகாய் செடிக்கு அடி உரமாக மண் புழு உரம், காய்கறி கழிவுகளை கொடுக்கலாம்.
அதன் பிறகு வாரத்தில் ஒரு முறை புளித்த மோர் அல்லது தேமோர் கரைசலை கொடுக்கலாம்.
புளித்த மோருடன் கடலை புண்ணாக்கை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கட்டி இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இதனையும் செடியின் வேர் பகுதியில் வாரத்தில் ஒரு நாள் கொடுத்து வரலாம். இப்படி கொடுப்பதன் செடிகள் செழித்து வளர்வதோடு மட்டுமில்லாமல் காய்களும் அதிகமாக காய்க்கும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |