How To Grow Larger Mint Leaves in Tamil
அனைத்து விதமான சமையலிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது. இதனால் பெரும்பாலான வீடுகளில் புதினா செடி வளர்த்து வருவார்கள். ஆனால் ஒரு சில புதினா செடி நாம் எதிர்பார்த்த அளவிற்கு வளராது. எனவே அப்படி வளராமல் இருக்கும் புதினா செடிக்கு சில ஊட்டச்சத்துக்களை நாம் கொடுக்க வேண்டும். புதினா செடிக்கு தேவையான ஊட்டச்சத்து கொடுத்தால் தான் நன்கு வளர தொடங்கும். அதுமட்டுமில்லாமல் இலைகளும் அதிகமாக வளரும். எனவே புதினா செடி அடர்தியாகவும் படர்ந்தும் வளர என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
Mint Leaves Grow Tips in Tamil:
புதினா செடி செழித்து வளர உரம்:
முதலில் செம்மண் 40 சதவீதம், தேங்காய் நார் கழிவு 30 சதவீதம் மற்றும் மண்புழு உரம் 30 சதவீதம் அளவில் எடுத்து கொள்ளுங்கள்.இதனை நன்றாக கலந்து மண்கலவையாக எடுத்து கொள்ளுங்கள்.
இந்த மண் கலவையை ஒரு குரோ பேக்கில் அல்லது மண் தொட்டியில் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு, உங்கள் ஒரு விரலை கொண்டு குழிபறித்து அதில் புதினா தண்டுகளை ஊன்றி வைக்க வேண்டும்.
புதினா செடியை சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் வைக்கக்கூடாது. மிதமான சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும்.
புதினா செடி நடவு செய்த 10 நாட்களில் அறுவடைக்கு தயார் ஆகும். எனவே ஒவ்வொரு முறைஅறுவடை செய்த பிறகும் புதினா செடிக்கு மண்புழு உரம் கண்டிப்பாக இட வேண்டும்.
மேலும், பக்கவாட்டில் கிளைகள் வளரம்போது அதற்கு மேலே உள்ள இலைகளை வெட்டி எடுக்க வேண்டும்.
அப்பொழுதுதான் மீண்டும் மீண்டும் அதிக இலைகள் வளர தொடங்கும்.
7 நாட்கள் போதும் உங்கள் வீட்டு தோட்டத்தில் பசுமையான வெந்தய கீரை துளிர்விட…
புதினா செடி வளர்க்கும் முறை:
முதலில் கடையில் இருந்து வாங்கி வந்த தடினமான புதினா தண்டை எடுத்து கொள்ளுங்கள். அதிலும் இரண்டாக கிளைத்திருக்கும் தண்டை எடுத்து கொண்டால் மிகவும் நல்லது.
அத்தண்டில் மேலே உள்ள இரண்டு புதினா இலைகளை மட்டும் நீக்கிவிட வேண்டும். பிறகு ஒரு கண்ணாடி டம்ளரில் பாதியளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் புதினா தண்டை வைக்க வேண்டும்.
இந்த தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். 5 நாட்களில் இந்த புதினா தண்டு வேர் விட தொடங்கிவிடும்.
பிறகு புதினா தண்டை எடுத்து மண்ணில் நட வேண்டும். அதன் பிறகு அதற்கு மண்புழு உரம், தண்ணீர் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..
புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…
செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |