கொத்தமல்லி செடியில் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்

Advertisement

கொத்தமல்லி செடியில் செய்ய   கூடாத தவறுகள்

என்ன தான் வீட்டில் பல வகையான பூக்கள் செடி, மரங்கள் செடி என வளர்த்து வந்தாலும் கூட கொத்தமல்லி செடி வீட்டில் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதனை எப்படி வீட்டில் வளர்ப்பது என்ற குழப்பமானது அனைவருக்கும் இருக்கும். ஏனென்றால் கொத்தமல்லியை பெரும்பாலும் யாரும் வீட்டில் வளர்க்க மாட்டார்கள்.

கடையில் வாங்கி தான் பயன்படுத்துவார்கள். ஒருவேளை அப்படி வளர்த்து வந்தாலும் கூட அதற்கு பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.  நீங்கள் கொத்தமல்லி செடி வளர்த்து வந்து அதில் எந்த விதமான ரிசல்ட்டையும் கொடுக்கவில்லை என்றால் அதில் சில தவறுகளை செய்கிறீர்கள். அவை என்ன தவறு என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

விதை:

கொத்தமல்லி செடியில் செய்ய   கூடாத தவறுகள்

நீங்கள் விதைகளின் மூலம் கொத்தமல்லி செடிகள் வளர்கிறீர்கள் என்றால் விதையின் மீது மண் சேர்த்து மூட வேண்டும் என்பதை நினைவுல வச்சுக்கோங்க..முக்கியமாக நீங்கள் மண் மேலே போடும் போது உலர்ந்த மண்ணாக இருக்க கூடாது. ஓரளவிற்கு ஈரப்பதமாக உள்ள மண்ணை தான் போட வேண்டும்.

உரம்:

கொத்தமல்லி செடியில் செய்ய   கூடாத தவறுகள்

கொத்தமல்லி செடியில் அதிகமான தளைகள் வருவதற்காக உரங்களை அதிகமாக போடுவார்கள். நீங்கள் இப்படி உரங்களை சேர்ப்பதால் இரண்டு அல்லது மூண்டு முறை கொத்தமல்லி செடிகள் நன்றாக வளரும். அதன் பிறகு செடிகளின் ஆரோக்கியமானது மோசமாக ஆகிவிடும். அதனால் நீங்கள் இயற்கையான உரங்களை பயன்படுத்துவது நல்லது.

பச்சை மிளகாய் செடியில் கூடை கூடையாய் காய்கள் காய்க்க இதை மட்டும் ஊத்துங்க..

இடம்:

கொத்தமல்லி செடியை வளர்ப்பதற்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் சிறந்த மாதமாக இருக்கிறது.  அப்படி நீங்கள் இந்த இரண்டு மாதம் இல்லாமல் வேறு மாதங்களில் வளர்க்கிறீர்கள் என்றால் கொஞ்ச நேரம் வெயில் மற்றும் நிழல் உள்ள பகுதியில் வளர்க்க வேண்டும்.இவற்றை சூரிய ஒளி அதிகம் படாத இடத்தில் வைத்து வளர்ப்பது சிறந்ததாக இருக்கும்.

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

 

Advertisement