பல உரங்கள் கொடுத்தும் உங்கள் முல்லை செடி பூக்கவில்லையா ? அப்போ இத Try பண்ணி பாருங்க…

Advertisement

முல்லை செடியில் அதிக பூக்கள் பூக்க 

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே வீட்டு தோட்டம் அமைப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்ப்பதில் அதிக ஈடுபாடுடன் காணப்படுகின்றனர். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் பல வகையான பூச்செடிகளில் ரோஜா பூச்செடியும் மல்லிகை செடியும் கண்டிப்பாக இருக்கும். பெண்கள் இந்த இரண்டு செடிகளையும் மிகவும் விரும்புவர்.

அப்படி நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கவலைப்படும். அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் இருக்கும் முல்லை செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுவதுமாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன்பெறுங்கள். வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்.

முல்லை பூ செடியின் வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி ?

முல்லை செடியை எப்படி பராமரிப்பது ?

 

முல்லை செடிகளை பராமரிப்பது எளிது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் செடிகளை பாதுகாத்தால் உங்கள் விட்டு முல்லை பூ செடி அதிக பூக்களுடன் உங்கள் இடத்தை பிரகாசமாக்கும்.

முல்லை பூ செடிகள் 9 மாதங்கள் பூப்பூக்க கூடியது. மார்ச் முதல் டிசம்பர் வரை இவை பூப்பூக்கும்.

சூரிய ஒளி:

முல்லை செடிகள் அனைத்து கால நிலைகளிலும் பூக்காது. அதனை பராமரிப்பதன் மூலம் செடியின் வளர்ச்சியை அதிகரித்து அதிக பூக்கள் பூக்க வைக்கலாம்.

முல்லை செடிக்கு போதுமான வெயில் தேவை ஆகவே சூரிய ஒளி படும் இடத்தில் முல்லை செடியை நட வேண்டும்.

ஈரப்பதம்:

முல்லை செடி வைக்கும் மண் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். வறட்சி காலங்களில் மண்ணில் எப்போதும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

அதிக தண்ணீர் விட்டாலும் செடி வீணாகிவிடும்.

முல்லை செடியில் ஒரு கிளையில் பூக்கள் பூத்து கொட்டிய பின்னர் அதனைஇ சிறிதளவு நறுக்கி விடவேண்டும். அப்போது தான் அதிக கிளைகள் விட்டு அதிக பூக்கள் பூக்கும்.

மண்:

மண் தரம்

முல்லை செடி செம்மண்ணில் நன்றாக வளர கூடியது. வீட்டில் தொட்டிகளில் அல்லது வீட்டு தோட்டத்தில் வளர்ப்பது என்றல் 40 % செம்மண். 30% தேங்காய் நார்கள் மற்றும் 30 % தொழுஉரமும் நல்லது.

எந்த தோட்ட மண்ணிலும் அமிலத்தன்மை இல்லாதவரை மற்றும் போதுமான தண்ணீரை வழங்கினால் அவை நன்றாக வளரகூடியது. இந்த முல்லை செம்மண்ணில் சிறப்பாக வளரும். மண்ணின் pH மதிப்பு 6.0 முதல் 7.0 வரை இருக்க வேண்டும்.

செடி தேர்ந்துஎடுக்கும் முறை:

நீங்கள் வளர்க்கபோகும் செடிகளை நர்சரிகளில் இருந்து வாங்கும் போது கவனத்துடன் வாங்க வேண்டும். பர்சரியில் வாங்கும் போது பச்சையை தன்மை கொண்ட செடியில் பாத்தியம் செய்து நிறைய பூக்கள் உள்ள செடிகளை விட தடிமனான பூக்கள் அற்ற செடிகள் சிறந்தது.

உரம்: 

ஒரு பாத்திரத்தை அரிசி கழுவிய தண்ணீர் எடுத்துக்கொள்ளவும் அதனுடன் சிறிதளவு கோதுமை மாவு சேர்த்து தண்ணியாக கரைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

இதனை அப்படியை உங்கள் செடியின் வேரிலிருந்து 2 செ.மீ தொலைவில் ஊற்ற வேண்டும்.

நாட்டு சர்க்கரை சேர்க்கும் போது எறும்பு தொல்லை ஏற்படுவதாக உணர்ந்தால், நாட்டு சர்க்கரை சேர்க்காமல் மஞ்சள் தூள் அல்லது டீ தூள் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருட்களை கொண்டு உங்க ரோஜா செடியை கொத்து கொத்த பூக்க வைக்கலாம்.

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement