பூக்காத முல்லை பூச்செடியும் பூத்து குலுங்க பழைய சாதம் போதும்..!

Advertisement

Mullai Plant Growing Faster in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே தாவரங்கள் வளர்ப்பதில் அதிக  ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் கொண்டுள்ளனர். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் பல வகையான பூச்செடிகளில் இந்த முல்லை பூச்செடியும் ஒன்று. நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் முல்லை பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கவலைப்படும். இப்படி உங்க வீட்டில் உள்ள முல்லை பூச்செடியிலும் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லையா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்க வீட்டில் இருக்கும் முல்லை பூச்செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

ஒரே ஒரு வாழைக்காய் போதும் பூக்காத மல்லிகை செடியும் கிலோக்கணக்கில் பூத்து குலுங்கும்

முல்லை பூ செடி வளர்ப்பு முறை:

முல்லை செடி

பெண்களுக்கு மிகவும் பிடித்த பல பூக்களில் இந்த முல்லை பூவும் ஒன்று. அதனால் இதனை பலரும் தங்களின் வீட்டில் விரும்பி வளர்ப்பார்கள். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் முல்லை பூ செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்:

  1. பழைய சாதம் – 2 கப் 
  2. ஆவாரம்பூ – 1 கப் 
  3. காய்கறி கழிவு – 2 கப் 
  4. பெருங்காயத்தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
  5. தயிர் – 1 கப்
  6. தண்ணீர் – தேவையான அளவு 

பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியும் பூத்து குலுங்க 1 துண்டு இஞ்சி போதும்

பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் பழைய சாதம், 1 கப் ஆவாரம்பூ மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

காய்கறி கழிவினை சேர்க்கவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் காய்கறி கழிவினையும் சேர்த்து கொள்ளுங்கள்.

காய்ந்த ரோஜா செடியும் 5 நாட்களில் துளிர்விட்டு பூக்கள் பூத்து குலுங்க வாழைப்பழம் மட்டும் போதும்

பெருங்காயத்தூளினை கலக்கவும்:

பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூளினையும் சேர்த்து கொள்ளுங்கள்.

தயிரை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக அதனுடன் 1 கப் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனை 1 வாரத்திற்கு அப்படியே விடுங்கள். பின்னர் இதனை எடுத்து உங்களின் முல்லை பூச்செடிகளின் வேர்களில் ஊற்றுங்கள்.

இதனை வாரத்திற்கு இரு முறை என்று தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முல்லை பூச்செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூப்பதை நீங்களே காணலாம்.

ஒரே தண்டில் 100 மொட்டுக்கள் ரோஜா செடி பூத்து குலுங்க இந்த 2 பொருள் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement