காய்ந்த முல்லை செடியிலும் 7 நாட்களில் பூக்கள் பூத்து குலுங்க இதை ட்ரை பண்ணி பாருங்க.!

Advertisement

முல்லை பூச்செடி வளர்ப்பது எப்படி.?

பொதுவாக அனைவருக்குமே பூச்செடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் தான் வீட்டின் வாசல் பகுதிகளிலும், மாடியிலும் பூச்செடிகளை வளர்ப்பார்கள். இந்த பூச்செடிகள் வளர்ப்பதால் அழகாக காட்சியளிக்கும். இதனால் வெளியில் செல்லு போது பூச்செடிகள் விற்றால் வாங்கி வந்து விடுவார்கள். சில பேர் எந்த செடி வைத்தாலும் உடனே வளர ஆரம்பித்து விடும். சில பேர் வைக்கும் செடி அப்படியே இருக்கும். இதற்காக கடையில் விற்கும் உரங்களை வாங்கி அடிப்பார்கள். இதனால் செடி வளருமா என்றால் இல்லை. சில நபர்களுக்கு வேண்டுமானால் ரிசல்ட்டை கொடுத்திருக்கும். அதனால் பணத்தை செலவு செய்யாமல் முல்லை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க என செய்ய வேண்டும் எண்டது தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முல்லை பூச்செடி வளர்க்கும் முறை:

 தொட்டியின் அளவு:

முல்லை பூச்செடி நீண்ட ஆயுள் உடைய செடியாக இருக்கிறது. அதனால் நல்ல அகலமான தொட்டியை செலக்ட் செய்து கொள்ளவும். நீங்கள் grow bag-ல் வளர்ப்பதாக இருந்தால் 15*18 அளவுள்ளதாக வாங்கி கொள்ள வேண்டும்.

மண் கலவை:

மண் கலவையானது சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். நீங்கள் செடி வைக்க போதும் மண்ணில் தொழு உரம், மண்புழு உரம் இவற்றில்  ஏதவாது ஒன்றை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

இந்த உரங்களை மாதத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.

முல்லை பூச்செடி வளர்ப்பது எப்படி

உங்களுக்கு இந்த உரம் ஏதும் கிடைக்கவில்லை என்றால் நம் வீட்டில் வீணா போன காய்கறி எல்லாம் இருக்கும் அல்லவா அதை தண்ணீரில் சேர்த்து ஊற வைக்க வேண்டும். இந்த தண்ணீரை தினமும் கொடுத்து வந்தாலே செடிகள் நன்றாக வளரும்.

உரம்:

நீங்கள் உரமாக epsom salt-யை கொடுக்க வேண்டும். இதனை செடிக்கு அடியில் சேர்த்து ஒரு ஸ்பூன் வைத்து மண்ணை மூடி விட வேண்டும். இதை 2 வாரத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.

செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..

கிளைகளை வெட்டி விடுதல்:

முல்லை செடியில் உள்ள கிளையை வளர வளர வெட்டி விட வேண்டும். கிளைகளை வெட்டாமல் அப்படியே விட்டு விட்டால் செடி மட்டும் தான் காடு போல் வளரும். அதில் செடிகள் பூக்கும் தன்மை குறைந்து விடும்.

நீங்கள் செடியின் கிளைகளை வெட்டி விட்டால் தான் கிளைகள் இரண்டாக பிரிந்து அதிக மொட்டுகள் வைக்க தொடங்கும். அதனால் 6 மாதத்திற்கு ஒரு முறை கிளைகளை நறுக்க வேண்டும்.

புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்

 

Advertisement