3 நாட்களில் முல்லை பூச்செடி துளிர்விட்டு பூக்கள் பூக்க இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க

Advertisement

முல்லை பூச்செடி வளர்ப்பது எப்படி.?

பொதுவாக பூச்செடி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதனால் தான் வீட்டில் பூச்செடிகளை வளர்த்து வருகிறார்கள். அப்படி வளர்க்கும் போது பூச்செடியில் அதிக பூக்கள் பூத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். அதுவே பூக்கள் பூக்காவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டே இருப்போம். அதாவது பூக்கள் அதிகமாக பூக்க வேண்டுமென்றால் இயற்கையான முறையை கையாளுவது நல்லது. அதனால் இந்த பதிவில் இயற்கையான முறையில் முல்லை பூச்செடியை வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முல்லை பூச்செடி வளர்ப்பது எப்படி.?

முல்லை செடி வைக்கும் மண் கலவையானது செம்மண் அல்லது உங்கள் வீட்டு பகுதிகளில் கிடைக்க கூடிய மண் வகைகளில்  எதாவது ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் மாட்டு எருது அல்லது ஆட்டு எருது, மக்கிய தேங்காய் நார், இலை தழைகள் போன்றவற்றை கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு செடிகளை வைக்க வேண்டும்.

இதனை உங்கள் செடிக்கு மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் கொடுங்கள்.

காய்கறி கழிவு:

முல்லை பூச்செடி வளர்ப்பது எப்படி

வீட்டில் இருக்கும் காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்திய பிறகு மீதமுள்ள கழிவுகளை முல்லை செடிக்கு கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதன் மூலம் உங்கள் முல்லை செடி வேகமாக மொட்டுகள் வைக்க தொடங்கும்.

இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றால் காய்கறி கழிவுகளை தண்ணீரில் சேர்த்து மூன்று நாட்கள் ஊற விட வேண்டும். மூன்று நாட்கள் கழித்து இதிலிருந்து வெறும் தண்ணீரை மட்டும் எடுத்து ஊற்ற வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் வாழைப்பழ தோலில் அதிக அளவு பொட்டாசியம் சத்து நிறைந்து இருக்கிறது. எனவே வாழைப்பழ தோலை அரைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை முல்லை செடிக்கு ஊற்றலாம்.

இதனை நீங்கள், வாரத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை முல்லை செடிக்கு கொடுக்கலாம்.

அடுத்து அரிசி கழுவிய தண்ணீரை தினமும் செடியின் வேர் பகுதியில் கொடுத்து வர வேண்டும்.  இதன் மூலம் செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு உதவியாக இருக்கிறது.

செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்

 

Advertisement