பூக்காத முல்லை பூச்செடியும் இதை ஒரு முறை ஊற்றினால் காடு போல் பூக்கும்..!

Advertisement

Mullai Poo Sedi Athiga Pookal Pooka Tips in Tamil

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே தாவரங்கள் வளர்ப்பதில் அதிக  ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பூச்செடிகள் வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் கொண்டுள்ளனர். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் பல வகையான பூச்செடிகளில் இந்த முல்லை பூச்செடியும் ஒன்று. நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் முல்லை பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கவலைப்படும். இப்படி உங்க வீட்டில் உள்ள முல்லை பூச்செடியிலும் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லையா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்க வீட்டில் இருக்கும் முல்லை பூச்செடியில் காடு போல் பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு  அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையெல்லாம் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

இதை மட்டும் ஊற்றினால் நீண்ட நாட்களாக பூக்காத மல்லிப்பூ செடியில் கூட கொத்து கொத்தாக பூக்கள் பூக்கும்

Best Homemade Fertilizer for Rotana Flower Plant in Tamil:

Best Homemade Fertilizer for Rotana Flower Plant in Tamil

பொதுவாக பெண்களுக்கு பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி மிகவும் பிடித்த பல பூக்களில் இந்த முல்லை பூவும் ஒன்று. அதனால் இதனை பலரும் தங்களின் வீட்டில் விரும்பி வளர்ப்பார்கள்.

அப்படி நாம் விரும்பி வளர்க்கும் முல்லை பூ செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

அது என்ன குறிப்பு என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னால் அதற்கு தேவையான பொருட்களை பார்ப்போம்.

  1. குச்சி தீவனம் – 1 கைப்பிடி அளவு 
  2. எப்சம் உப்பு – 1 கைப்பிடி அளவு 
  3. பழைய சாதம் – 2 கப் 
  4. ஆவாரம்பூ – 1 கப் 
  5. காய்கறி கழிவு – 2 கப் 
  6. பெருங்காயத்தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
  7. தயிர் – 1 கப்
  8. தண்ணீர் – தேவையான அளவு 

வாழைத்தார்களில் அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்

பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் பழைய சாதம், 1 கப் ஆவாரம்பூ மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

குச்சி தீவனத்தை சேர்த்து கொள்ளுங்கள்:

Mullai poo sedigal pookal athigam pooka tips in tamil

இப்பொழுது அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1 கைப்பிடி அளவு குச்சி தீவனத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

எப்சம் உப்பினை கலந்து கொள்ளவும்:

Homemade fertilizer for mullai poo plant in tamil

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு எப்சம் உப்பினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பலா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்

காய்கறி கழிவினை சேர்க்கவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் காய்கறி கழிவினையும் சேர்த்து கொள்ளுங்கள்.

பெருங்காயத்தூளினை கலக்கவும்:

பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூளினையும் சேர்த்து கொள்ளுங்கள்.

தயிரை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக அதனுடன் 1 கப் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனை 1 வாரத்திற்கு அப்படியே விடுங்கள். பின்னர் இதனை எடுத்து உங்களின் முல்லை பூச்செடிகளின் வேர்களில் ஊற்றுங்கள்.

இதனை வாரத்திற்கு இரு முறை என்று தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டில் நீண்டநாட்களாக பூக்காமல் இருந்த முல்லை பூச்செடியிலும் காடுபோல் கொத்து கொத்தாக பூக்கள் பூப்பதை நீங்களே காணலாம்.

மாமரத்தில் உள்ள பூக்கள் அனைத்தும் காய்களாக மாற இந்த கரைசலை மட்டும் கொடுங்கள் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

Advertisement