Mullai Poo Sedi Athigam Pooka Tips in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்களின் வீட்டில் அழகுக்காகவோ தேவைக்காகவோ சிறிய அளவிலான தோட்டத்தை அமைத்து பல வகையான செடிகளை வளர்க்கிறார்கள். அப்படி பலரும் விருப்பப்பட்டு வளர்க்கும் செடிகளில் ஒன்று தான் இந்த முல்லை பூச்செடி. அப்படி நாம் விருப்பப்பட்டு வளர்க்கும் முல்லை பூச்செடியில் அதிக பூக்கள் பூக்கவில்லை என்று கவலைபடுபவர்களுக்காக தான் இன்றைய பதிவு. ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் உங்களின் செடிகளின் ஆரோக்கியத்தை பலப்படுத்த உதவும் சில குறிப்புகளை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்க வீட்டின் முல்லை பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூப்பதற்கு உதவும் குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
ஒரே வாரத்தில் பூக்காத மல்லிகை பூச்செடியும் பூத்து குலுங்க எலுமிச்சை பழம் போதும்
முல்லை பூ அதிகமாக பூக்க:
நாம் அனைவருக்கும் மிக மிக பிடித்த பூக்கள் வகைகளில் ஒன்று தான் இந்த முல்லை பூ. அதனால் இதனை நாம் அனைவருமே நமது வீடுகளில் உள்ள தோட்டத்திலும் மாடித்தோட்டத்திலும் இந்த முல்லை பூச்செடிகளை மிகவும் விரும்பி வளர்ப்போம்.
அப்படி நாம் மிகவும் விரும்பி வளருக்கும் முல்லை பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- பழைய சாதம் – 2 கப்
- காய்கறி கழிவு – 2 கைப்பிடி அளவு
- கடலை புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு
- வேப்பம் புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
3 நாட்களில் கொத்தமல்லி துளிர் விடுவதற்கு இதை மட்டும் செய்யுங்க
பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் பழைய சாதம் மற்றும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள்.
காய்கறி கழிவினை சேர்த்து கொள்ளவும்:
பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு காய்கறி கழிவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
3 நாட்களில் காய்ந்த மல்லிகை செடியிலிருந்து துளிர்விட வெங்காயம் மட்டும் போதும்
கடலை புண்ணாக்கிணை சேர்த்து கொள்ளவும்:
அடுத்து அதனுடனே 2 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கினையும் சேர்த்துக் நன்கு கலந்து கொள்ளுங்கள்.
வேப்பம் புண்ணாக்கிணை சேர்த்து கொள்ளவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு வாரத்திற்கு அப்படியே விடுங்கள்.
அதற்கு பிறகு இதனை உங்களின் முல்லை பூச்செடிகளுக்கு ஊற்றுங்கள். இதனை தொடர்ந்து செய்து ஊற்றி வருவதன் மூலம் உங்களின் முல்லை பூச்செடி அதிக அளவு பூக்கள் பூக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…
ஒரே ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க என்ன பண்ணனும் தெரியுமா…
7 நாட்கள் போதும் உங்கள் வீட்டு தோட்டத்தில் பசுமையான வெந்தய கீரை துளிர்விட
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |