இதை 1 கிளாஸ் ஊற்றுங்கள் பூக்காத முல்லை பூச்செடி கூட கிலோ கணக்கில் பூக்கள் பூக்கும்..!

Advertisement

Mullai Poo Sedi Valarpu

பொதுவாக நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த உலகில் நம்முடன் இணைந்து வாழ்கின்ற விலங்குகள் மற்றும் தாவர வகைகளின் மீது நமக்கு அதீத ஆசை மற்றும் பாசம் உள்ளது அதனால் நாம் அனைவருமே நமது வீடுகளில் சிறிய அளவிலான தோட்டம் அல்லது மாடி தோட்டத்தை அமைத்து அதில் நமக்கு பிடித்த மற்றும் நமக்கு பயனுள்ள பலவகையான தாவரங்களை வளர்த்து வருகின்றோம். அப்படி நாம் அனைவரின் வீட்டில் உள்ள தோட்டங்களில் கண்டிப்பாக இடம் பெற்றுள்ள ஒரு செடி என்றால் அது முல்லை பூச்செடி தான்.

அப்படி நாம் மிகவும் விருப்பப்பட்டு வளர்க்கும் முல்லை பூச்செடியில் ஏதாவது ஒரு பூச்சி தாக்குதல் ஏற்பட்டு அது சரியாக பூக்கவில்லை என்றால் நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் இன்று முல்லை பூச்செடியில் உள்ள பூச்சித்தாக்குதலை நீக்கி வேகமாக வளர்ந்து அதிக அளவு காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Mullai Poo Sedi Athigam Pooka:

முல்லை பூ செடி வளர்ப்பு

நமது வீடுகளில் உள்ள தோட்டங்களில் என்னதான் பலவகையான காய்கள் மற்றும் கனிகளின் செடிகளை வளர்த்தாலும் ஒரு சில பூச்செடிகளையாவது மிகவும் விரும்பி வளர்ப்போம்.

அப்படி நாம் விரும்பி வளர்க்கும் செடிகளில் ஒன்று தான் இந்த முல்லை பூச்செடி. நமது மனம் கவர்ந்த இந்த முல்லை பூச்செடிக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அது அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கஷ்டப்படும்.

அதனால் தான் அதனை அதிக அளவு பூக்கள் பூக்க வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

பப்பாளி மரத்தில் உள்ள மாவு பூச்சியினை போக்கி அதிக பூக்கள் வைக்க இதை ட்ரை பண்ணுங்க

தேவையான பொருட்கள்:

  1. காய்கறி கழிவு – 1 கப்
  2. அரிசி கழுவிய தண்ணீர் – 2 கப்
  3. புளித்த இட்லி மாவு – 1 கப்
  4. புளித்த மோர் – 1 கப்
  5. தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் காய்கறி கழிவு மற்றும் 2 கப் அரிசி கழுவிய தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடனே நன்கு புளித்த 1 கப் இட்லி மாவு மற்றும் 1 கப் மோர் ஆகியவற்றையும்  சேர்த்து நன்கு கலந்து இரண்டு முதல் மூன்று நாட்கள் நன்கு ஊறவிடுங்கள்.

அதன் பிறகு அதில் உள்ள தண்ணீரை மட்டும் வடிக்கட்டி எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் இரண்டு மடங்கு தண்ணீரை கலந்து உங்களது முல்லை பூச்செடிக்கு ஊற்றுங்கள்.

இதனை தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்களது முல்லை பூச்செடி அதிகம் பூக்க தொடங்குவதை நீங்களே காணலாம்.

கத்திரிக்காய் செடி தாறுமாறாக காய்கள் காய்க்க இதை 1 கிளாஸ் ஊற்றுங்கள் போதும்

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement