ஒரே செடியில் ஓராயிரம் பூக்கள்
ஹலோ பிரண்ட்ஸ்..! பெரும்பாலும் நம்மில் பலரும் வீட்டை சுற்றி செடிகள் வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் பலரும் விரும்புவது பூச்செடிகளை தான். வீட்டை சுற்றி பூச்செடிகள் இருந்தாலே பார்ப்பது அவ்வளவு அழகா இருக்கும். அதுமம்மட்டும் இல்லை. வீட்டு வாசலில் கலர் கலராக பூச்செடிகள் இருந்தால் வீட்டிற்கு வரும் திருஷ்டி நீங்கிவிடும் என்று சொல்வார்கள். அதனாலேயே பலரும் பூச்செடிகளை வீட்டில் முன் பக்கத்தில் வளர்க்கிறார்கள். அப்படி வளர்க்கும் செடிகளில் முல்லை பூச்செடி செடியும் ஓன்று. இது செடி இல்லை கொடி என்று நம் அனைவருக்குமே தெரியும். சரி வாங்க ஒரே முல்லை செடியில் ஓராயிரம் பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஒரே முல்லை செடியில் ஓராயிரம் பூக்கள் பூக்க டிப்ஸ்:
பொதுவாக பலரது வீடுகளில் முல்லை செடியை வளர்ப்பார்கள். அதில் சில வீடுகளில் பூக்கள் நன்றாக பூத்து குலுங்கும். சில வீடுகளில் பூக்கள் பூக்கவே பூக்காது. அவர்களிடம் கேட்டால் நன்றாக தண்ணீர் ஊற்றுகிறேன். உரம் கொடுக்கிறேன் ஆனால் செடியில் பூக்கள் பூக்கவே இல்லை என்று சொல்லி புலம்புவார்கள்.
அப்படி புலம்புபவர்களுக்கு ஒரு அருமையான டிப்ஸை கூறப்போகிறேன். 1 ரூபாய் கூட செலவில்லாமல் முல்லை செடியில் பூக்கள் பூக்க செய்யலாம்.
ரோஜா செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு எப்சம் சால்ட் மட்டும் போதும்
- பழைய சாதம்
- அரிசி கழுவிய நீர்
- காய்கறி கழிவுகள்
முதலில் பழைய சாதத்தை 1 வாரம் வரை மூடி வையுங்கள். பின் 1 வாரம் கழித்து அதை நன்றாக கரைத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதில் அரிசி கழுவிய நீரை சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் வெங்காயம், பூண்டு போன்ற காய்கறி தோள்களையும் சேர்த்து நன்றாக கலந்து 3 நாட்கள் வரை மூடு வையுங்கள்.
3 நாட்கள் கழித்து அதை எடுத்து, முல்லை செடியின் வேர்கள் இருக்கும் இடத்தில் ஒரு குழி போல் தோண்டி அதில் ஊற்றவும். பின் மண்ணை கிளறிவிட வேண்டும். இதுபோல 15 நாட்களுக்கு அல்லது 1 மாதத்திற்கு ஒரு முறை என்று ஊற்றி வந்தால் செடி நன்றாக வளர்ந்து கூடை கணக்கில் பூக்கள் பறிக்கும் அளவிற்கு பூக்கள் பூத்து குலுங்கும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |