Mullai Pookal Pooka Vaipathu Eppadi
பூக்கள் என்றவுடன் நாம் அனைவருக்கும் முதலில் தோன்றும் பூ இரண்டு விதமான பூக்களாக மட்டும் தான் இருக்கும். அதில் ஒன்று முல்லை பூ, மற்றொன்று மல்லி பூ. அதுமட்டும் இல்லாமல் இந்த இரண்டு பூக்கள் தான் பெண்கள் அனைவரும் விரும்பக்கூடிய ஒரு பூக்களாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் நிறைய நபர்கள் வீட்டில் இந்த இரண்டு விதமான பூக்களும் இருக்கும். ஆனால் வீட்டில் அத்தகைய செடிகளில் பூக்கள் அதிகமாக பூக்காது. பூக்கள் பூக்கவில்லை என்றால் நாம் 1 அல்லது 2 மாதம் பார்த்து விட்டு செடியினை பராமரிப்பதை அப்படியே விட்டு விடுவோம். ஆனால் இனி நீங்கள் இது மாதிரி செய்ய வேண்டாம். ஏனென்றால் இன்றைய பதிவில் பூக்களில் ஒன்றான முல்லைப்பூ செடியில் அதிகமாக பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
பூக்காத மல்லிகை பூ செடியிலும் பூக்க வைப்பதற்கு வெந்தயம் மட்டும் போதும்
முல்லை பூ அதிகமாக பூக்க:
முல்லை பூவின் வாசனை என்பது அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒன்றாக தான் உள்ளது. அந்த வகையில் பார்த்தால் நாம் வீட்டில் வளர்த்து வரும் முல்லை பூ செடிகள் அந்த அளவிற்கு பூக்களை தருவது இல்லை.
ஆகையால் பூக்காத முல்லை பூ செடியிலும் பூக்கள் அதிகமாக பூக்க கரைசல் எவ்வாறு தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க..!
- கடலை புண்ணாக்கு- 200 கிராம்
- வேப்பம் புண்ணாக்கு- 50 கிராம்
- தண்ணீர்- 1 லிட்டர்
மேலே கூறிய இரண்டு புண்ணாக்கினையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கரைசல் தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு பிளாஸ்டிக் அல்லது மண் பாத்திரத்தினை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு 200 கிராம் கடலை புண்ணாக்கு மற்றும் 50 கிராம் வேப்பம் புண்ணாக்கினை அதில் ஒன்றாக சேர்த்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு 1 லிட்டர் தண்ணீரை அதனுடன் சேர்த்து நன்றாக காற்று போகாத அளவிற்கு மூடி வைத்து விடுங்கள். இத்தகைய பொருளை 2 நாட்கள் வரை திறக்கக்கூடாது.
2 நாட்கள் கழித்து அதனை திறந்து ஒரு கரண்டியால் கலந்து மீண்டும் 2 நாட்கள் வரை மூடி வைத்து விட வேண்டும். இதனை தொடர்ந்து கடைசி 2 நாட்கள் முடிந்த பிறகு கரைசலை திறந்து விடுங்கள்.
அடுத்து தயார் செய்துள்ள கரைசலை ஒரு வாளியில் சேர்த்து அதனுடன் 1 லிட்டர் தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது செடிகளுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய புண்ணாக்கு கரைசல் தயார்.
செடிகளுக்கு கரைசல்:
தண்ணீர் கலந்து வைத்துள்ள கரைசலை முல்லை பூ செடிகளின் வேர்களில் படுமாறு ஊற்றி வேண்டும். பின்பு 3 மாதம் கழித்து மீண்டும் இத்தகைய கரைசலை ஊற்ற வேண்டும்.
இவ்வாறு கரைசலுக்கு புண்ணாக்கு கரைசலை அளிப்பதன் மூலம் பூக்காத முல்லை பூ செடியிலும் பூக்க கிலோ கணக்கில் பூக்க ஆரம்பித்து விடும்.
மேலும் பூச்செடியில் நீளமாக வளர்ந்து பூக்களே பூக்காமல் இருக்கும் கிளையினை வெட்டி விடுவது நல்லது. ஏனென்றால் இவ்வாறு நாம் வெட்டி விடுவதன் மூலம் மற்ற செடிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
செம்பருத்தி செடியில் மொட்டு உதிராமல் அதிகமாக பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும்..
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |