முல்லை பூச்செடியில் பூக்கள் பூத்து குலுங்க இதை மட்டும் ஊற்றினால் போதும்..

Advertisement

முல்லை பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க

பொதுவாக அனைவருக்குமே செடிகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பெண்களுக்கு பூச்செடி வளர்க்க தான் ஆசையாக இருக்கும். பெண்களுக்கு பூக்கள் என்றால் அவ்வளவு பிடிக்கும். வீட்டிலேயே பூச்செடி வளர்த்தால் காசு கொடுத்து பூக்கள் வாங்க வேண்டிய அவசியமில்லை, அதுமட்டுமில்லாமல் தினமும் தலையில் பூ வைத்து கொள்ளலாம். அதில் அதிகமாக வளர்க்க கூடிய செடியாக முல்லை மட்டும் மல்லி உள்ளது. இந்த செடிகளை ஆசைப்பட்டு வளர்ப்பார்கள். ஆனால் சிலர் வைக்கும் செடி உடனே வளர்ந்து அதில அதிகமாக பூக்கள் பூக்கும். ஆனால் சிலர் வைப்பதில் செடிகளில் வளர்ச்சி காணப்படாது. அதனால் செடியை பராமரிப்பதை வெறுத்து விடுவார்கள். இந்த பதவில் முல்லை பூச்செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு 5 டிப்ஸ்களை பற்றி காண்போம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முல்லை பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க:

செடி வைக்கும் முறை:

நீங்கள் முதலில் செடிகளை வைப்பது முக்கியமான ஒன்று. மண் தரையில் வளர்த்தால் பிரச்சனையில்லை. அதுவே நீங்கள் தொட்டியில் வளர்க்கிறீர்கள் என்றால் அகலமான தொட்டியில் வளர்க்க வேண்டும். இந்த தொட்டியானது 1 1/2 அடி அகலமும், 1 1/2 அடி நீளமும் உடையதாக இருக்க வேண்டும்.

பூக்காத மல்லிகை பூ செடியிலும் பூக்க வைப்பதற்கு வெந்தயம் மட்டும் போதும் 

மண் கலவை:

முல்லை பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க

மண் கலவையானது சத்து நிறைந்த மண் கலவையாக இருக்க வேண்டும். செடி வைப்பதற்கு முன்பே மண் கலவையில் மண்புழு உரம், தொழு உரம், காய்கறி கழிவு போன்றவற்றை போட வேண்டும். இந்த உரத்தில் பொட்டாசியம், நைட்ரஜன், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை மொட்டுகள் அதிகமாக வைப்பதற்க்கு உதவியாக இருக்கும். மண் கலவையில் சேர்ப்பதோடு மட்டுமில்லாமல் மாதத்திற்கு ஒரு முறை இந்த உரங்களை சேர்த்து கலந்து விட வேண்டும்.

செடிகளை கட் செய்ய வேண்டும்:

6 மாதத்திற்கு ஒரு முறை செடிகளை நறுக்க வேண்டும். இதனால் செடிகளை நறுக்கும் போது பக்கவாட்டு கிளைகள் அதிகமாக வைக்கும். இதனால் செடிகளில் பூக்கள் அதிகமாக வைப்பதற்கு உதவுகிறது.

உரம்:

முல்லை பூச்செடியில் அதிக பூக்கள் பூக்க

உரமாக நீங்கள் காய்கறி கழுவுகளை மாதத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் epsom salt-யை மண் கலவையில் கலந்து விட வேண்டும். இது போல் கொடுப்பதால் செடிகள் நன்றாக வளர்ந்து பூக்கள் அதிகமாக பூப்பதற்கு உதவி செய்கிறது.

செம்பருத்தி செடியில் மொட்டு உதிராமல் அதிகமாக பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும்..

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement