பூக்கள் வைத்து காய்க்காத முருங்கை மரத்திலும் காய்கள் அதிகமாக காய்க்க டிப்ஸ்..!

Advertisement

Murungai Marathil Kaigal Kaika Tips

முருங்கை மரத்தினை அனைத்து வீடுகளிலும் பார்க்கவே முடியாது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் இதனை பார்ப்பது என்பது மிகவும் அரிது. ஏனென்றால் எந்த இடத்தில் எப்படி முருங்கை மரத்தை வளர்ப்பது என்ற குழப்பம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஒருவேளை அப்படி முருங்கை மரத்தினை நல்ல முறையில் வளர்த்து வந்தாலும் கூட அதில் பூக்கள் இருக்கும், ஆனால் காய்கள் இருக்காது என்பது ஒரு பிரச்சனையாகவே இருக்கும். இந்த பிரச்சனை ஒரு சில இடத்தில்  மட்டும் இல்லாமல் பெரும்பாலான வீடுகளில் இருக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. ஆகவே இத்தகைய பிரச்சனைக்கான ஒரு டிப்ஸாக காய்க்காத முருங்கை செடியிலும் காய்கள் தாறுமாறாக காய்க்க என்ன செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முருங்கை மரத்தில் அதிகமாக காய்க்க:

பொதுவாக முருங்கை மரம் சற்று வளர்ந்து அதில் கிளைகள் வைக்க ஆரம்பித்து விட்டால் அடிக்கடி முருங்கை கீரையை பறித்து விட வேண்டும். ஏனென்றால் அப்போது தான் முருங்கை மரம் இன்னும் செழிப்பாக வளர ஆரம்பிக்கும்.

இவ்வாறு செய்வது மட்டும் இல்லாமல் பூண்டு தோல், வெங்கயத்தோல் என இவற்றை எல்லாம் மரத்தின் கீழ் உள்ள மண்ணில் மீது போட்டு வருவது நல்லது.

 முருங்கை மரத்தில் அதிகமாக காய்க்க

  • பழைய சாதம் தண்ணீர்- 1 கப் 
  • பெருங்காயத்தூள்- 1 ஸ்பூன் 

இப்போது ஒரு பாத்திரத்தில் மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டையும் சேர்த்து நன்றாக இந்த 2 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த தண்ணீரை 5 நாட்கள் வரை அப்படியே வைத்து விடுங்கள்.

5 நாட்கள் கழித்து 5 லிட்டர் தண்ணீரில் பெருங்காயத்தூள் சேர்த்து பதப்படுத்தி வைத்த தண்ணீரை சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கலந்து விடுங்கள். கடைசியாக தயார் செய்து வைத்துள்ள கரைசலை முருங்கை மரத்தின் வேர் பகுதிகளில் ஊற்றி வாருங்கள்.

இந்த தண்ணீரை முருங்கை மரத்திற்கு ஊற்றுவதன் மூலம் முருங்கை மரம் செழிப்பாக வளருவதோடு மட்டும் இல்லாமல் பூக்கள் அனைத்தும் காயாக மாறி அதிகமாக காய்க்க ஆரம்பித்து விடும்.

கத்தரிக்காய் செடியில் காய்கள் தாறுமாறாக காய்க்க இதை உரமாக ட்ரை பண்ணுங்க 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement