Natural Fertilizer for Guava Tree in Tamil
பொதுவாக இன்றைய சூழலில் அனைவருக்குமே செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் மற்றும் விருப்பம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கொய்யா மரம் பலரது வீட்டில் வளர்க்கிறார்கள். ஏனென்றால், அதில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது. அதாவது உடல் எடை குறைய, சர்க்கரை நோய் குணமாக கொய்யா காய்கள் உதவுகின்றது. சிலரது வீட்டில் ரொம்ப நாட்களாக கொய்யா மரம் இருக்கும். ஆனால் கொய்யா காய்கள் அதிகமாக இருக்காது. இன்னும் ஒரு சிலரது வீட்டில் பூக்கள் அதிகமாக பூக்கும் ஆனால் காய்களே காய்ந்திருக்காது. இப்படி உங்க வீட்டில் உள்ள கொய்யா மரத்திலேயும் அதிக அளவு காய்கள் காய்க்கவில்லையா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்க வீட்டில் இருக்கும் கொய்யா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
மாதுளை மரத்தில் உள்ள பிஞ்சுகள் அனைத்தும் காய்களாக மாற இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்
Best Organic Fertilizer for Guava Tree in Tamil:
சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்கும் மிகவும் பிடித்த பழங்களில் இந்த கொய்யா பழமும் ஒன்று. அதனால் இதனை பலரும் தங்களின் வீட்டில் விரும்பி வளர்ப்பார்கள். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் கொய்யா மரத்தில் அதிக அளவு காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
- வேர்க்கடலை புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு
- வேப்பம் புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு
- காய்கறி கழிவு – 2 கைப்பிடி அளவு
- தண்ணீர் – 4 லிட்டர்
வாழைத்தார்களில் அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்
பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 லிட்டர் தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள்.
வேர்க்கடலை புண்ணாக்கிணை கலந்து கொள்ளவும்:
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வேர்க்கடலை புண்ணாக்கிணை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
வேப்பம் புண்ணாக்கிணை சேர்த்து கொள்ளவும்:
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கிணையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
காய்கறி கழிவுகளை கலக்கவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு காய்கறி கழிவுகளையும் சேர்த்து நன்கு கலந்து இதனை பத்து நாட்கள் அப்படியே விடுங்கள். பிறகு இதனை வடிக்கட்டி உங்க வீட்டில் உள்ள கொய்யா மரத்தின் வேர்களில் ஊற்றி கொள்ளுங்கள்.
இதனை வாரத்திற்கு இரு முறை என்று தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் கொய்யா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
பலா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |