வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காய்க்கவே காய்க்காத முருங்கை மரத்தில் கூட அதிக காய்க்கள் காய்க்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

Updated On: July 20, 2023 9:29 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Natural Fertilizer for Moringa Tree in Tamil

பொதுவாக நமது இந்திய பாரம்பரிய உணவுமுறைகளில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பது கீரைகள் தான். அப்படிப்பட்ட கீரைகளிலேயே மிகவும் முக்கியமானது என்றால் அது முருங்கை கீரை தான். அதனால் அனைவருமே இந்த முருங்கை மரத்தை தங்களது வீட்டில் வளர்ப்போம். ஆனால் ஒரு சிலரின் வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் நீண்ட நாட்களாக முருங்கை காய்கள் காய்க்காமல் இருக்கும். மேலும் ஒரு சிலரின் வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் அதிக அளவு பூக்கள் எல்லாம் வைக்கும். ஆனால் கொஞ்சம் நாள் கழித்து அவையாவும் மரத்திலிருந்து கீழே உதிர்ந்துவிடும். இப்படி உங்கள் வீட்டின் முருங்கை மரத்தில் உள்ள பூக்கள் அதிக அளவு கொட்டுகிறதா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இந்த பதிவில் இயற்கையான முறையில் உங்க வீட்டின் முருங்கை மரத்தில் உள்ள பூக்கள் அதிக அளவு கொட்டுவதை தடுத்து அதிக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க போகின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

தென்னை மரத்தின் குரும்பை மற்றும் பூக்கள் கொட்டுவதை தடுக்க இதை செய்யுங்க போதும்

Organic Fertilizer for Moringa Tree in Tamil:

Organic Fertilizer for Moringa Tree in Tamil

இயற்கையான முறையில் உங்க வீட்டின் முருங்கை மரத்தில் உள்ள பூக்கள் அதிக அளவு கொட்டுவதை தடுத்து அதிக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம் வாங்க.

முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பெருங்காயத்தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
  2. அரிசி கழுவிய தண்ணீர் – 3 லிட்டர் 
  3. மோர் – 1/2 லிட்டர் 
  4. வேப்பம் புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு 
  5. காய்கறி கழிவு – 1 கைப்பிடி அளவு 

பூக்காத செம்பருத்தி பூச்செடியில் கூட அதிக அளவு பூக்கள் போக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்

பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 3 லிட்டர் அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள். அதனுடன் 1/2 லிட்டர் மோரையும் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பெருங்காயத்தூளை கலக்கவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்திருந்த 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூளையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

வேப்பம் புண்ணாக்கை சேர்க்கவும்:

அடுத்து அதில் 1 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

உங்க வீட்டில் உள்ள நெல்லிக்காய் மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்கதண்ணீருடன் இதை மட்டும் கலந்து ஊற்றுங்கள் போதும்

காய்கறி கழிவை கலந்து கொள்ளவும்: 

இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு காய்கறி கழிவை யும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை அப்படியே இரண்டு முதல் மூன்று நாட்கள் நன்கு ஊறவிடுங்கள்.

பின்னர் இதனை ஒரு 7 லிட்டர் முதல் 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதிலிருந்து 1 கப் தண்ணீரை மட்டும் உங்களின் முருங்கை மரத்துக்கு அருகில் ஒரு குழி தோண்டி அதில் ஊற்றி கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் முருங்கை மரத்தில் உள்ள அனைத்து பூக்களும் கைகளாக மாறுவதை நீங்களே காணலாம்.

உங்க வீட்டில் உள்ள கொய்யா மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்கதண்ணீருடன் இதை மட்டும் கலந்து ஊற்றுங்கள் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now