How To Grow Mullai Plant in Tamil
நாம் அனைவருமே வீட்டில் பலவிதமான காய்கறி செடிகள், பூச்செடிகள் மற்றும் மரங்கள் போன்றவற்றை வளர்த்து வருவோம். ஆனால் பெண்கள் அனைவரும் விரும்பி ஆசை ஆசையாக வளர்ப்பது பூச்செடிகள் தான். அதிலும் குறிப்பாக ரோஜா செடி, முல்லை செடி போன்றவற்றை அதிகமாக வளர்த்து வருவார்கள். ஆனால் ஒரு சீசன் முடிந்ததும் முல்லை செடிகள் பூக்காமல் போய்விடும் அல்லது சில செடிகள் நீளமாக வளர்ந்து கொண்டே போகுமே தவிர அதில் மொட்டுக்களே வைக்காது. எனவே அப்படி இருக்கும் செடிகளுக்கு நாம் சில பொருட்களை உரமாக இட வேண்டும். அந்த வகையில் முல்லை செடி அதிகமாக பூக்க உரமாக கொடுக்கக்கூடிய பொருட்களில் இன்று பழைய சோறு. இதனை எப்படி முல்லை செடிக்கு உரமாக கொடுப்பது என்பதை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Natural Fertilizer For Mullai Plant in Tamil:
தேவையான பொருட்கள்:
- பழைய சோறு
- காய்கறி தோல்கள்
- அரிசி கழுவிய தண்ணீர்
- ஆவாரம்பூ
முதலில் பழைய சோற்றினை 1 வாரம் வரை ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து, இதனை கை வைத்து நன்கு கரைத்து கொள்ளுங்கள் அல்லது ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு இதனுடன், காய்கறி கழிவுகள், அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் ஆவாரம்பூ சேர்த்து 1 நாள் நொதிக்க விடுங்கள்.
இப்போது, இந்த கரைசலை முல்லைச்செடிக்கு உரமாக கொடுங்கள்.
முல்லை செடியின் வேர்பகுதிக்கு அருகில் ஒரு குழி பறித்து அதில் இந்த கரைசலை ஊற்ற வேண்டும். அதன் பிறகு, மண்ணை கொண்டு மூடி விடுங்கள்.
இந்த கரைசலை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை முல்லை செடிக்கு உரமாக கொடுத்து வந்தால் செடியில் அதிக மொட்டுகள் வைத்து பூக்க தொடங்கும். மேலும், காலை மாலை என இரு வேலைகளிலும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
குண்டு மல்லி செடியில் பூக்கள் பூத்து குலுங்க எலுமிச்சை பழ தோல் மட்டும் போதும்..
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |