Natural Fertilizers For Roses in Tamil
வீட்டில் முதலில் ஒரு பூச்செடி வைப்பதாக இருந்தாலும் சரி தோட்டம் வைப்பதாக ருந்தாலும் சரி நாம் முதலில் வாங்குவது ரோஜா செடியை தான். ஏனென்றால் ரோஜா செடியை தான் அதிகம் விரும்புவார்கள். செடி என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது ரோஜா செடிதான். இதெல்லாம் இருக்கட்டும்.. ரோஜா செடியை ஆசையாக வாங்கி வந்து வீட்டில் வைத்தால் துளிர்விடவே மாட்டிங்கிறதே அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா..? என்று தானே கேட்கிறீர்கள்..? அதற்கு சூப்பரான வழி ஒன்று இருக்கிறது அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ரோஜா செடி துளிர்விட:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் வேப்பம் புண்ணாக்கு மற்றும் கடலை புண்ணாக்கை இரண்டையும் சமமான அளவில் எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று நாட்கள் வரை ஊறவைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு, இதனை நன்கு கரைத்துவிட்டு இதனுடன் கம்போஸ்ட் டீ சேர்த்து கொள்ளுங்கள். இந்த கரைசலை நீங்கள் ரோஜா செடிக்கு உரமாக இடுவதன் மூலம் ரோஜா செடி பட்டுப்போகாமல் துளிர்விட்டு அதிக பூக்கள் பூக்க தொடங்கும்.
இந்த கரைசலை நீங்கள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ரோஜா செடிக்கு கொடுத்து வருவதன் மூலம் ரோஜா செடி நன்கு துளிர்விட்டு பூக்கள் பூக்க தொடங்கும்.
டீ கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி?
ரோஜா செடி வருடம் முழுவதும் பூக்க என்ன செய்ய வேண்டும்..?
தேவையான பொருட்கள்:
- வாழைப்பழத்தோல் – 5
- கற்றாழை மடல் – 1
- வெல்லம் – 1 துண்டு
- டீ தூள் – 1 ஸ்பூன்
- தண்ணீர் – 1லிட்டர்
முதலில் வாழைப்பழத்தோலினையம் கற்றாழையையும் சின்ன சின்னதாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து , அதில் நறுக்கி வைத்த வாழைப்பழத்தோலினையும் கற்றாழையையும் சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் 1 ஸ்பூன் காஃபி தூள் அல்லது 1 ஸ்பூன் டீ தூள் சேர்த்து கொள்ளுங்கள்.
இந்த பொருட்களை எல்லாம் கலந்த பிறகு, இறுதியாக 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு நீளமான குச்சியை பயன்படுத்தி நன்கு கலந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு, இந்த கரைசலை நன்கு மூடி 3 நாட்கள் வரை நொதிக்கவைக்க வேண்டும். அதன் பிறகு, இதனை வடிகட்டி ரோஜா செடிக்கும் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் உங்கள் ரோஜா செடி வருடம் முழுவதும் பூத்து கொண்டே இருக்கும்.
வெல்லம் ஒன்று போதும்..! ஒரே ஒரு செம்பருத்தி செடியிலும் 100 பூக்கள் பூக்கும்..!
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |