அரை நெல்லிக்காய் கொத்து கொத்தாய் காய்க்க இதனை மட்டும் உரமாக கொடுங்கள்.!

Advertisement

Natural Fertilizer For Small Gooseberry in Tamil

அரை நெல்லிக்காய் மரம் 2 மீ முதல் 9 மீ வரை வளரக்கூடிய ஒரு மரம். அரை நெல்லிக்காய் நம் உடலின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று. இதனை நாம் பலரும் வீட்டில் வளர்த்து வருவோம். ஆனால், அம்மரம் நன்றாக வளர்ந்து கொண்டே இருக்குமே தவிர அதில் காய்கள் காய்க்க தொடங்காது. இன்னும் சில மரங்களில் சிறிய அளவில் தான் காய்கள் காய்க்கும். எனவே, இப்படி காய்கள் அதிகம் காய்க்காமல் இருக்கும் மரங்களுக்கு நம் சில உரங்களை இட வேண்டும். அதில் முக்கியமான உரம் பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

How To Grow Small Gooseberry Plant in Tamil:

 how to grow small gooseberry plant in tamil

அரை நெல்லிக்காய் செடி நீண்ட நாட்களாக காய்கள் காய்க்காமல் இருந்தால் இந்த ஒரு கரைசலை நெல்லிமரத்திற்கு உரமாக கொடுங்கள்.

மாமரத்தில் பூ வைக்க வில்லையா.. அப்போ இதை மட்டும் மாமரத்திற்கு போடுங்கள்..! தாறுமாறாக பூ வைக்கும்.!

பெருங்காய கரைசல்:

முதலில் ஒரு பெருங்காயத்தை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள். பெருங்காயம் நன்றாக ஊறியதும் அதனை கையால் நன்றாக கரைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைசல் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.

இப்போது, அரைநெல்லி மரத்திற்கு அடியில் இருக்கும் புற்களை களை எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு, அதில் தயாரித்து வைத்த பெருங்காய கரைசலை ஊற்றி விடுங்கள் அல்லது பெருங்காயத்தினை அரை நெல்லி மரத்திற்கு அடியில் புதைத்து வைத்து விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் அரை நெல்லிக்காய் மரம் எந்தவிதமான நோய்கள் தாக்குதலின்றி அதிகமாக காய்க்க தொடங்கும்.

மேலும், அரை நெல்லிக்காய் மரத்தில் உள்ள பக்க கிளைகளை சிறிய அளவில் வெட்டி நீக்கிவிட வேண்டும். ஏனென்றால் மரத்தில் அதிக கிளைகள் இருந்தால் விரைவாக காய்கள் காய்க்க தொடங்காது.

இந்த முறையை நீங்கள் ஒருமுறை பின்பற்றி பாருங்கள். உங்கள் அரை நெல்லிக்காய் மரம் கொத்து கொத்தாய் காய்க்க தொடங்கும்.

வாழை மரம் அதிகமாக காய்க்க இந்த உரங்களை மட்டும் போடுங்கள்.!

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement