நெல் வயலில் எலி தொல்லை
எலிகளின் அட்டகாசம் என்பது முன்பு எல்லாம் வீடு மற்றும் கார்களில் தான் இருந்தது. ஆனால் இப்போது இவற்றை எல்லாம் தாண்டி நெல் வயல்களிலும் பிரச்சனை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. நெல் வயலில் எலி தொல்லை இருந்தால் அது வயல்களில் இருக்கும் நெல் பயிர்களை முழுவதும் நாசம் செய்து விடுகிறது. இத்தகைய நிலைமை மட்டும் ஏற்பட்டால் போதும் விவசாயம் செய்தவருக்கு லாபம் என்பது இல்லாமல் நஷ்டம் ஏற்படக்கூடிய நிலை தான் வந்து விடும். மேலும் மற்ற பயிர்களை போல இல்லாமல் விவசாயம் என்பது மிகவும் கடினமான ஒன்று. எனவே எலி தொல்லை இல்லாமல் இருந்தால் தான் நெல் பயிர்கள் அனைத்தும் நல்ல முறையில் வளரும். ஆகையால் இன்று நெல் வயல்களில் எலி தொல்லை இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
செம்பருத்தி செடியில் உள்ள மாவு பூச்சினை போக்க மைதா மாவு போதும்
How to Avoid Rats at Field Home Remedies:
டிப்ஸ்- 1
உழவனுக்கு நண்பனாக இருந்து மண்புழு எவ்வாறு உதவுகிறதோ இதற்கு எதிர்மாறாக எலி தொல்லை செய்கிறது. அதனால் எலி தொல்லை வராமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் வயலில் இருக்கும் வரப்பினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
டிப்ஸ்- 2
மேலும் வரப்பின் உயரம் எவ்வளவு இருந்தாலும் பிரச்சனை கிடையாது. ஆனால் அகலம் என்பது 2 முதல் 3 அடி வரைக்குளேயே இருக்க வேண்டும். இவ்வாறு இருப்பதன் மூலம் எலி வராமல் இருக்கும்.
பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியிலும் கூடை கூடையாக பூக்கள் பூக்க வேர்க்கடலை மட்டும் போதும்
டிப்ஸ்- 3
- வறுத்த நிலக்கடலை- 1 கைப்பிடி அளவு
- சிமெண்ட்- 1 கைப்பிடி அளவு
முதலில் எடுத்துவைத்துள்ள 1 கைப்பிடி அளவு வறுத்த நிலக்கடலையினை பவுடர் போல அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்துள்ள பவுடருடன் 1 கைப்பிடி அளவு சிமெண்ட் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
இப்போது தயார் செய்து வைத்துள்ள கலவையினை வயல்களில் எலி இருக்கும் ஓட்டைக்கு அருகில் வைத்து விடுங்கள். இவ்வாறு வைத்தால் போதும் எலிகளில் தானாகவே வந்து அவற்றை சாப்பிட்டு விடும்.
ஏனென்றால் எலிகளுக்கு வறுத்த நிலக்கடலையின் வாசனை என்பது பிடிக்கும். அதனால் இதை சாப்பிட்டு விட்டு பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம் எலி இறந்து விடும்.
மிளகாய் செடியில் உள்ள மாவுப்பூச்சினை போக்கி நன்கு காய்க்க இதை ஒரே ஒரு கிளாஸ் ஊற்றுங்கள் போதும்
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |