உளுந்து சாகுபடி முறையில் புதிய தொழில்நுட்பம்..!

உளுந்து சாகுபடி

உளுந்து சாகுபடி முறை மற்றும் பயன்கள்..! Ulunthu Vivasayam in Tamil..!

உளுந்து பயிரிடும் முறை: முன்னெல்லாம் இட்லி தோசை என்றால் தீபாவளி, பொங்கல் என்ற விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படும் ஒரு பலகாரமாக இருந்தது.  ஆனால் இப்போதோ எல்லா வீடுகளிலும் தினதோறும் இட்லி செய்கிறார்கள் மற்றும் வீதிக்கு வீதி பலவகையான ஹோட்டல்கள் இருப்பதினால் உளுந்தின் தேவைகள் அதிகமாக இருக்கிறது. எனவே உளுந்து சாகுபடி (ulunthu sagupadi tamil) செய்தால் அதிக வருவாயை ஈட்டலாம். மேலும் பயறு வகை பயிர்களில் புரதங்கள், தானிய பயிர்களின் அளவைவிட இரண்டு மடங்கு அதிகம் என்பதால், தமிழகத்தில் பயறு வகை பயிர்களை சுமார் 8.84 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, 7.67 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

இது நமது தேவையைவிட மிக குறைவு என்பதால், பயர் வகைப் பயிர்களை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்கவும்  ஆடியில் மக்காச்சோளம் சாகுபடி!!!

 

சரி வாங்க உளுந்து பயிரிடும் முறை(அ) இயற்கை முறையில் உளுந்து சாகுபடி செய்வது எப்படி என்பது பற்றி இப்போது நாம் காண்போம்.

உளுந்து பயிரிடும் முறை (அ) உளுந்து சாகுபடி செய்வது எப்படி / ulunthu vivasayam in tamil ..!

உளுந்து சாகுபடி – உளுந்து இரகங்கள்:

பயறு வகைப் பயர்களில் உளுந்து முதன்மை பயிராக விளங்குகிறது. இந்த உளுந்து சாகுபடி (ulunthu sagupadi tamil) முறைக்கு ஏற்ற இரகங்கள்,  இவற்றில் வம்பன் 5 மற்றும் வம்பன் 6 ரகங்கள் உளுந்து சாகுபடி முறைக்கு ஏற்றது.

இந்த ரகங்கள் 65 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு வரும், தனிப்பயிராக விதைக்க 20 கிலோவும், ஊடுபயிராக விதைக்க 10 கிலோவும் பயன்படுத்தலாம்.

உளுந்து பயிரிடும் முறை – பூஞ்சாண விதைப்பு:

உளுந்து பயிர் செய்யும் முறையில் பூஞ்சாண விதைப்பு செய்ய ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது 4 கிராம் டிரைகோடர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரைசன்ஸ் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

பூஞ்சாண விதை நேர்த்தி செய்து 24 மணி நேரம் கழித்து 3 பாக்கெட் ரைசோபியம் மற்றும் 3 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவினை, சுமார் 750 மி.லி ஆறிய அரிசி கஞ்சியில் கலந்து பூஞ்சாண விதை நேர்த்தி செய்து, விதைகளை நன்கு பிசைந்து 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி பிறகு விதைக்க வேண்டும்.

உளுந்து விதைக்கும் கருவி:

உளுந்து சாகுபடி (ulunthu sagupadi tamil) முறையில் உளுந்து விதைகளை, விதைக்கும் கருவிகளை கொண்டு விதைப்பு செய்தால், வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும், செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளிகள் விடுவதினால், ஒரு சதுர மீட்டரில் 33 செடிகளை பராமரிக்க முடியும்.

பூஞ்சாண விதை நேர்த்தி செய்வதினால் விதை மூலம் பரவும் வேர்வாடல் மற்றும் இலைப் புள்ளி நோய்கள் வராமல் பாதுகாக்கப்படுகிறது.

இதன் மூலம் வளர்ச்சி திறனை அதிகரிக்கும் மண்ணின் மூலம் பரவும் நோய்களை இளஞ்செடிகளில் இருந்து தடுத்துவிட முடியும்.

பயறுவகை பயிர்களில் மிகவும் சிறப்பு தன்மை வாய்ந்தது வேர்முடிச்சுகளே ஆகும்.

எனவே இவற்றில் ரைசோபியம் விதை நேர்த்தி செய்வதினால், அதிக வேர்முடிச்சுகளை உருவாக்கி, காற்று மண்டலங்களில் உள்ள தளைச் சத்தை நிலைநிறுத்தி அதை பயர் வகை பயிர்களுக்கு வழங்க உதவுகிறது.

பாஸ்போ பாக்டீரியா:

உளுந்து சாகுபடி (ulunthu sagupadi tamil) முறையில் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்வதினால், மணிச்சத்தை பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிரிகளை அதிகரித்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்க வழிவகுகிறது.

இதனால் ரசாயன உர செலவை குறைத்து, மகசூலை அதிகரிக்க உதவுகிறது.

இதையும் படிக்கவும்  எலுமிச்சை சாகுபடி செய்வது எப்படி???

உளுந்து பயிரிடும் முறை – உளுந்து சாகுபடி நீர் நிர்வாகம்:

உளுந்து சாகுபடி (ulunthu sagupadi tamil) பொறுத்தவரை அதிக மகசூல் பெறுவதற்கு 2 சதவீதம் டிஏபி கரைசலான, அதாவது 5 கிலோ டிஏபி கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி தெளிந்த கரைசலை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் கைதெளிப்பானால் தெளித்துவிட வேண்டும்.

மேலும் தெளிக்கும்போது வயலில் போதுமான ஈரப்பதம் இருக்க வேண்டும். இந்த முறையை 50% பூக்கும் தருணத்தில் ஒரு முறையும். அதன் பிறகு 15 நாட்கள் இடைவெளி விட்டு மறுமுறை தெளிக்க வேண்டும்.

மேலும் மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்ட செடிகளை உடனே களைதல் வேண்டும்.

உளுந்து சாகுபடி- பயிர் பாதுகாப்பு முறை:

உளுந்து சாகுபடி (ulunthu sagupadi tamil) பொறுத்தவரை பயிர் பாதுகாப்புக்கு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடிக்க வேண்டும்.

வேரழுகல் நோயை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் புளோரைசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியை, ஏக்கருக்கு 25 கிலோவுடன் 50 கிலோ தொழுவுரம் அல்லது மணலுடன் கலந்து, விதைத்த 30 நாட்கள் கழித்து மண்ணில் இட வேண்டும் அல்லது வேப்ப பிண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு 150 கிலோ இடவேண்டும்.

உளுந்தின் மருத்துவ பயன்கள்:-

நோயின் பாதிப்பு நீங்க:

Ulunthu payangal in tamil :- கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும்.

மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த தோல் உளுந்து(உளுந்து சாகுபடி) சிறந்த மருந்தாகும்.

இவர்கள் தோல் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய:

Ulunthu payangal in tamil :- இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

தோல் உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக:

Ulunthu payangal in tamil :- தோல் (கருப்பு) உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

உளுந்து வடை:

Ulunthu payangal in tamil :- தோல் (கருப்பு) உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு:

Ulunthu payangal in tamil :- தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து.

உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற:

Ulunthu payangal in tamil :- சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் கருப்பு உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு:

Ulunthu payangal in tamil :- சிறு குழந்தைகளுக்கு தோல் உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்:

Ulunthu payangal in tamil :- நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை.

இவர்களுக்கு தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

இதையும் படிக்கவும்  நல்ல வருமானம் தரும் உளுந்து சாகுபடி முறை..!

 

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்