அரளி பூ சாகுபடி செய்யும் முறை..!
விசேஷ நாட்களில் அதிகளவு விற்பனை ஆகக்கூடிய அரளி சாகுபடியை (arali flower) பற்றித்தான் இந்த பக்கத்தில் நாம் பார்க்கப்போகிறோம்.
அரளி மலர் எல்லா வகையான மண்ணிலும் சாகுபடி செய்யலாம். அதுவும் எல்லா காலகட்டத்திலும் சாகுபடி செய்யலாம்.
இவற்றில் சிவப்பு, வெள்ளை மற்றும் ரோஸ் என்று மூன்று நிறங்கள் உள்ளது. ஆனால் விவசாயிகள் பொதுவாக வெள்ளை நிறம் அரளி மலரே தேர்வு செய்கின்றன. இருப்பினும் சந்தையில் அதிகளவு சிவப்பு அரளி மலரே விற்பனை செய்யப்படுகிறது.
இந்த அரளி மலரை சாகுபடி செய்வதற்கு அதிகளவு தண்ணீர் செலவாகாது. அதே போல் நிலத்தில் நன்றாக இந்த அரளி செடியை சாகுபடி செய்து விட்டோம் என்றால் 25 ஆண்டுகள் வரை செழிப்பாக வளரக்கூடிய பயிராக விளங்குகிறது.
ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..! |
சரி வாருங்கள் அரளி பூ சாகுபடி (arali flower) செய்வது எப்படி என்று இந்த பகுதியில் நாம் காண்போம்.
நடவு முறை:
அரளி பூ சாகுபடி (arali poo sagupadi) செய்வதற்கு முன் ஒரு முறை நிலத்தை உழுது நன்றாக சமன்படுத்திய பின்பு, வரிசைக்கு வரிசை 10 செ.மீ என்றும், செடிக்கு செடி 10 செ.மீ என்று ஒரு அடி ஆழத்திற்கு குழிபறிக்க வேண்டும்.
பின்பு குச்சி அல்லது செடியை அந்த குழியில் நட வேண்டும். இந்த சாகுபடிக்கு குச்சிகளை நடுவது மிகவும் சிறந்த முறையாகும்.
குறிப்பாக குச்சிகளை பத்தியம் போட்டால் பயிர் நன்றாக வளரும். இந்த சாகுபடிக்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படாது என்பதால் செடிகளை நட்டவுடன் ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். பின்பு வாரம் இரு முறை தண்ணீர் தெளித்தால் போதுமானது.
செண்டு மல்லி பூ சாகுபடி முறை..! |
ஊட்டச்சத்து மேலாண்மை:
அரளி பூ சாகுபடி (arali poo sagupadi) பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து ஆகிய உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
செடிகளை நட்ட 45 நாட்கள் கழிந்ததும் 45 கிலோ தழைச்சத்து உரத்தினை இட்டு, செடிகளின் வேர் பகுதியில் மண் அணைக்க வேண்டும்.
களை நிர்வாகம்:
அரளி பூ சாகுபடி (arali poo sagupadi) பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை களை எடுத்துவிட வேண்டும்.
செடிகளின் நுனி கிள்ளுதல்:
அரளி பூ சாகுபடி (arali poo sagupadi) பொறுத்தவரை நடவு செய்த ஆறு மாதங்களில் பயிர்கள் வளர துவங்கி விடும்.
செடிகள் நன்றாக வளர்ந்து வரும் போது செடிகளின் நுனிப்பகுதியை அல்லது செடியின் முதல் பூ மொட்டுக்களை கிள்ளி எடுக்க வேண்டும்.
இப்படி செடிகளின் நுனியை கிள்ளி விடுவதால் செடிகளில் கிளைகள் அதிகளவு வரும். செடியும் நன்றாக வளரும்.
நன்றாக வளர்ந்த செடிகளில் அதிகளவு மொட்டுகள் பிடிக்க ஆரமித்து விடும். குறிப்பாக மொட்டுகள் மலர்வதற்குள் பறித்து ஒரு பாலீத்தின் கவரில் அடைத்து சந்தையில் விற்பனை செய்துவிட வேண்டும் இல்லையெனில் மலர்ந்த மலர்களை விற்பனைக்கு எடுத்துக்கொள்ளமாட்டார்கள். எனவே மொட்டுகள் மலர்வதுக்குள் பறித்து சந்தையில் விற்பனை செய்து விட வேண்டும்.
மல்லிகை பூ சாகுபடி முறைகள்..! |
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்..! |