நீண்ட நாட்களாக காய்க்காத நெல்லிக்காய் மரத்தில் கூட அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்..!

Advertisement

Organic Fertilizer for Gooseberry Tree in Tamil | நெல்லி மரம் காய்க்க

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக நெல்லிக்காய் மரம் பலரது வீட்டில் வளர்க்கிறார்கள். ஏனென்றால், அதில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது. அதாவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, உடல் எடை குறைய, சர்க்கரை நோய் குணமாக நெல்லிக்காய் உதவுகின்றது. சிலரது வீட்டில் ரொம்ப நாட்களாக நெல்லிக்காய் மரம் இருக்கும். ஆனால் நெல்லிக்காய்கள் அதிகமாக இருக்காது. இன்னும் ஒரு சிலரது வீட்டில் பூக்கள் அதிகமாக பூக்கும் ஆனால் காய்களே காய்திருக்காது.

இப்படி உங்க வீட்டில் உள்ள நெல்லிக்காய் மரத்திலேயும் அதிக அளவு காய்கள் காய்க்கவில்லையா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்க வீட்டில் இருக்கும் நெல்லிக்காய் மரத்தில் அதிக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

மாமரத்தில் உள்ள பூக்கள் அனைத்தும் காய்களாக மாற இந்த கரைசலை மட்டும் கொடுங்கள் போதும்

Best Organic Fertilizer for Gooseberry Tree in Tamil:

Best Organic Fertilizer for Gooseberry Tree in Tamil

பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே இந்த நெல்லிக்காய்கள் மிகவும் பிடிக்கும். அதனால் அனைவருமே தங்களின் வீட்டில் நெல்லிக்காய் மரத்தை வளர்ப்பார்கள்.

அப்படி நாம் அனைவரும் மிகவும் விரும்பி நமது வீட்டில் வளர்க்கும் நெல்லிக்காய் மரத்தில் அதிக அளவு காய்கள் காய்க்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் வருத்தப்படும்.

அதனால் நமது வீட்டில் உள்ள நெல்லிக்காய் மரத்தில் அதிக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.

  1. கடலை புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு 
  2. வேப்பம் புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு 
  3. அரிசி கழுவிய தண்ணீர் – 4 லிட்டர்
  4. பெருங்காயத்தூள் – 2 டேபிள் ஸ்பூன் 

காய்க்கவே காய்க்காத முருங்கை மரத்தில் கூட அதிக காய்க்கள் காய்க்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 லிட்டர் அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள்.

கடலை புண்ணாக்கிணை கலந்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கிணை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வேப்பம் புண்ணாக்கிணை சேர்த்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கிணையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பெருங்காயத்தூளினை கலந்து கொள்ளவும்:

Fertilizer for Gooseberry Tree in Tamil

இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூளினை கலந்து கொள்ளுங்கள். இதனை இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு அப்படியே விடுங்கள்.

அதன் பிறகு இதை வடிக்கட்டி உங்க வீட்டில் உள்ள நெல்லிக்காய் மரத்தின் வேர்களில் ஊற்றி கொள்ளுங்கள்.

இதனை வாரத்திற்கு இரு முறை என்று தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் நெல்லிக்காய் மரத்தில் கொத்து கொத்தாக அதிக அளவு காய்கள் காய்க்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

தென்னை மரத்தின் குரும்பை மற்றும் பூக்கள் கொட்டுவதை தடுக்க இதை செய்யுங்க போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement