Pachai Milagai Athigam Kaika Enna Seiya Vendum
அன்று முதல் இன்று வரை என பெரும்பாலான வீடுகளில் பூ, காய்கறி மற்றும் மரங்களை வளர்த்து வரும் பழக்கம் என்பது இருந்து வருகிறது. அதிலும் ஒரு சிலர் வீட்டில் காலம் காலமாக இத்தகைய முறையினை செய்யும் பழக்கம் இருந்து வரும். ஆனால் வீட்டு மாடித்தோட்டத்திலோ அல்லது தோட்டத்திலோ வளர்த்து வரும் காய்கறி செடிகள் மற்றும் பூச்செடிகள் எப்போதும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதாக தான் இருந்து வருகிறது. அதேபோல் எந்த விதமான ரசாயனமும் கலப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. ஆனால் இத்தகைய முறையில் பராமரித்து வந்தாலும் கூட சில நேரத்தில் காய்களின் மகசூல் என்பது பெரிதாக இல்லாமல் போய்விடும் நிலைமை என்பது ஏற்படுகிறது. ஆகவே இன்று வீடுகளில் வளர்த்து வரும் பச்சை மிளகாய் செடியில் அதிக காய்கள் காய்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
செம்பருத்தி செடியில் எறும்புகள் வராமல் இருக்க இதை மட்டும் ஊற்றுங்கள் போதும்
பச்சை மிளகாய் சாகுபடி:
முதலில் நீங்கள் பச்சை மிளகாய் செடியினை வெயில் படும் இடத்தில நடவு செய்ய வேண்டும். அதன் பிறகு மிளகாய் செடிக்கு தினமும் தோறும் தண்ணீர் ஊற்ற வேண்டும். மேலும் காய்ந்த இலைகள் அதில் எதுவும் இருந்தால் அதனை உடனே நீக்கி விட வேண்டும்.
பச்சை மிளகாய் செடியில் அதிக காய்கள் காய்க்க:
முதலில் ஒரு பெரிய வாளியில் அழுகிய வாழைப்பழத்தினை சேர்த்து அதனுடன் தேவையான அளவு மண்ணை சேர்த்து மூடி வைத்து விடுங்கள். பின்பு 1 வாரம் கழித்து இந்த வாழைப்பழ கரைசலை பச்சை மிளகாய் செடியில் பூக்கள் பூக்க ஆரம்பம் ஆகும் போது கொடுக்க வேண்டும்.
இத்தகைய கரைசலை கொடுப்பதன் மூலம் செடியில் பூக்கள் மற்றும் காய்கள் அதிகமாக வர ஆரம்பம் ஆகும்.
மேலும் காய்கள் காய்க்க ஆரம்பித்த உடன் பச்சை மிளகாய் செடிக்கு அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் மண்புழு உரம் தண்ணீர் என இந்த இரண்டினையும் வாரம் 1 முறை என மாறி மாறி ஊற்ற வேண்டும்.
இந்த இரண்டு கரைசலும் செடிகளுக்கு தேவையான பொட்டாசியம் மற்றும் இதை சத்தினை அளித்து அதிக காய்கள் காய்க்க உதவுகிறது.
முல்லை பூச்செடியில் பூக்கள் பூத்து குலுங்க இதை மட்டும் ஊற்றினால் போதும்..
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |