கொத்து கொத்தா இல்லங்க கூடை கூடையாய் பச்சை மிளகாய் காய்க்க நான் செய்தது இது தாங்க..

Advertisement

பச்சை மிளகாய் அதிக காய்கள் காய்க்க செய்ய வேண்டியவை

பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் ஏதவாது ஒரு செடி வளர்ப்பார்கள். சில நபர்கள் பூச்செடி வளர்ப்பார்கள், சில பேர் காய்கறி செடி வளர்ப்பார்கள். எல்லாரும் வளர்க்க கூடிய செடியாக பச்சை மிளகாய் உள்ளது. ஏனென்றால் பச்சை மிளகாய் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. இதனின் விலை வேற அதிகரித்து கொண்டே வருகிறது. இன்றைய விலையை வைத்து பார்க்கும் போது ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 40 ரூபாயாக உள்ளது. அதனால் வீட்டில் பச்சை மிளகாயை கூடை கூடையாய் காய்க்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

பச்சை மிளகாய் அதிக காய்கள் காய்க்க: 

மண் கலவை:

 

நீங்கள் புதிதாக பச்சை மிளகாய் செடி வளர்க்க போகிறீர்கள் என்றால் மண் கலவையில் சில உரங்களை சேர்த்து விட வேண்டும். அதாவது மண் உரத்தில் ஆட்டு சாணம், மாட்டு சாணம் போன்றவற்றை சேர்த்து கலந்து விட வேண்டும். அதன் பிறகு பச்சை மிளகாய் செடியை வைக்க வேண்டும்.

செடி வளர்ந்த பிறகு இந்த உரத்தை கொடுக்க கூடாது, அதாவது செடி வளர்ந்த பிறகு நீராக தான் கொடுக்க வேண்டும்.

உங்க வீட்டு பச்சை மிளகாய் செடியில் காய்கள் கொத்தாக காய்க்க என்ன செய்யலாம்..!

உரம்:

பச்சை மிளகாய் அதிக காய்கள் காய்க்க செய்ய வேண்டியவை

செடியில் பச்சை மிளகாய் அதிகமாக காய்க்காமல் இருப்பதற்கு கால்சியம் மற்றும் மெக்னீசியம் குறைபாடு தான். அதனால் இந்த இரண்டு சத்துக்களையும் அதிகரிக்க கூடிய உரமாக தெரிந்து கொள்வோம்.

முதலில் பசும்பால் வீணா போனதை எடுத்து கொள்ளவும். இதனை ஒரு டம்ளர் எடுத்து 1/2 லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இதனை செடிக்கு கொடுத்த வந்தால் பச்சை மிளகாய் அதிகமாக காய்க்கும்.

வெங்காய தோல், வாழைப்பழ தோல் போன்றவற்றை தண்ணீரில் ஊற வைத்து அதனை செடிக்கு உரமாக கொடுக்கலாம்.

முட்டை ஓட்டை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரானது ஆறிய பிறகு அதை உரமாக கொடுக்க வேண்டும்.

அடுத்து தேமோர் கரைசலை செடியின் மேல் படுமாறு தெளிக்க வேண்டும். இப்படி தெளிப்பதால் செடிகளில் உள்ள பூக்கள் உதிராமல் இருக்கும்.

முல்லை பூச்செடியில் பூக்கள் பூத்து குலுங்க இதை மட்டும் ஊற்றினால் போதும்..

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement