பலா மரத்தில் காய் காய்க்க டிப்ஸ் | How to Grow Jackfruit Tree Faster in Tamil
மரங்கள் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். ஆகவே அதனை நாம் தான் பாதுகாத்து வளர்க்கவேண்டும் அல்லவா..? நாம் வீட்டில் பெரியவர்கள் இருந்தார்கள் என்றால் மரத்தை வெட்டுவது கூடாது என்று சொல்வார்கள். சாதாரண மரங்களாக இருந்தாலும் கூட அப்படி சொல்வார்கள். அதுவே மனிதர்களுக்கு உதவிடும் வகையில் மரம் இருந்தால் அதனை எப்படி வெட்ட சொல்வார்கள். கிராமத்தில் அப்படி இருக்கும் அல்லவா. அதுவே நகர்புறத்தில் என்ன செய்வார்கள் என்றால் அதிகமாக மரங்களை வெட்டி அங்கு மாடிகளை காட்டுவார்கள். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வீட்டில் மாடியில் கூட மரங்கள் வளர்த்து வருகிறார்கள் அல்லவா..? அப்படி அது வளராமல் இருந்தால் கூட அதற்கு என்று தனியாக மருந்துகள் வாங்கி வந்து அதனை வேகமாக வளர வைக்கிறார்கள். அதேபோல் இந்த சீசன் பலா மர சீசன் அதனால் அந்த மரங்களை எப்படி அதிகமாக காய்காய்க்க வைக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க..? உங்கள் வீட்டில் மாடியில் வளர்த்தாலும் சரி அல்லது மண்ணில் வளர்த்தாலும் சரி இந்த டிப்ஸை follow பண்ணிக்கோங்க..?
பலா மரத்தில் காய் காய்க்க டிப்ஸ்:
டிப்ஸ்: 1
முதலில் நீங்கள் பலாமரம் வளர்க்க போகிறீர்கள் என்றால் அதனை நிறைய தண்ணீர் ஈரப்பதம் இருக்கும் இடத்தில் நடவேண்டமா..? அல்லது வறண்ட நிலத்தில் நடவேண்டுமா என்று கேள்வி இருக்கும் அது எந்த நிலத்தில் வேண்டுமானாலும் நடலாம். அதேபோல் இந்த பழமரங்கள் காய் பிஞ்சி வைக்கும் காலம் என்றால் அது பிப்ரவரி, வைத்து மே, ஜூன் அறுவடைக்கு தயாராகும். அதனால் அந்த காலத்தில் மட்டும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
டிப்ஸ்: 2
உங்கள் வீட்டில் மரங்கள் இல்லை, தோட்டத்தில் தான் மரம் இருக்கும் என்றால் அந்த மரங்களை சுற்றி ஒரு வட்ட வடிவில் குழிகளை வெட்டி அதில் தண்ணீர் ஊற்றவேண்டும். அது நன்றாக சுற்றி தண்ணீர் ஊறியஞ்சிய பிறகும் அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும். அப்போது தான் தண்ணீர் வற்றாமல் இருக்கும் பூக்களும் காய்களும் நன்கு வளர உதவும்.
நெல் பயிரிடும் முறை மற்றும் அதன் பயன்கள்
டிப்ஸ்: 3
மருந்துகள் உரம் போடாமல் மரம் எப்படி வளரும் என்று நினைப்பீர்கள் ஆனால் மரங்கள் உரங்கள் போடாமல் வளரும். அந்த காலத்தில் எந்த மருந்துகளும் இல்லாமல் தான் வளர்ந்து, ஆனால் இப்போது பூச்சிகள் அதிகம் உள்ளது என்றால் என்ன செய்யவேண்டும் என்று கேள்வி இருக்கும், அதனால் செடிகளுக்கு அதிக பாதிப்புகள் இருக்காது அப்படியே இருந்தால் அதற்கு உரம் போடவேண்டும் என்றால் அதற்கு தொழுஉரம் மட்டும் போதும் நற்புறங்களில் கிடைக்காது என்றால் அது ஆன்லைன் அதிகமாக கிடைக்கும் அதனை வாங்கி கூட உங்கள் செடிகளுக்கு உரமாக போடலாம். இப்படி செய்வதால் மரத்தில் அதிக காய் காய்க்க உதவும். அதேபோல் இதனை எல்லா செடிகளுக்கும் உரமாக போடலாம்.
டிப்ஸ்: 4
தொழு உரங்கள் போடும் போது அதனை சுற்றி உங்கள் வீட்டில் காய்கறிகள் இருந்தால் அதனை சேர்த்து அந்த வட்ட வடிவில் இருக்கும் குழியில் சேர்த்து போடலாம் அதேபோல் இதனை மாதத்திற்கு 1 முறை மட்டும் செய்யலாம் அப்போது தான் மரங்கள் வேகமாக கிடைக்கும். இதனை சரியாக செய்தால் மட்டும் போதும் மரத்தில் காய்கள் அதிகமாக கிடைக்கும்.
மண் வகை:
பலா மரம் அமிலத்தன்மை கொண்ட மண்ணில் நன்றாக வளரும் தன்மை கொண்டது. வடிகால் வசதியுள்ள ஈரப்பதமுள்ள இடத்தில இருந்தால் நன்றாக வளரும். பலா மரம் ஊன்றி, அது வேறு பிடித்து நன்றாக வளரும் வரை அதற்கு ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
தண்ணீர்:
வெயில் காலத்தில் பலா மரத்திற்கு அதிக தண்ணீர் ஊற்ற வேண்டும். மண் வறண்டு போகத் தொடங்கும் போதெல்லாம் அவற்றிக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மரத்தை சுற்றி தலைக்கூளம் போட்டு வைத்தால் ஈரப்பதம் இருந்துக்கொண்டே இருக்கும். அதேபோல், நீர் தேங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உரம்:
பலா மரத்திற்கு வருடத்திற்கு மூன்று முறை உரமிடுங்கள். மேலே கூறியுள்ள உரத்தினை தவறலாமல் வருடத்திற்கு மூன்று முறை போடுங்கள். இதன் மூலம் பலா மரம் அதிகமாக காய்க்க தொடங்கும்.
பலா மரம் எத்தனை வருடத்தில் காய்க்கும் | பலா மரம் காய்க்க என்ன செய்ய வேண்டும்
- பலாமரத்திற்கு, ஒரு வருடத்திற்கு ஒரு முறை தொழுஉரம் 10 கிலோ என்ற அளவில் கொடுக்க வேண்டும். அதாவது ஆட்டு எருது, மாட்டு எருது மற்றும் அவற்றின் சிறுநீர் மற்றும் தாவர கழிவு போன்றவற்றை கலந்து கொடுக்க வேண்டும்.
- மேலும் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து போன்றவற்றை கலந்து 1 கிலோ அளவில் உரமாக கொடுக்க வேண்டும்.
- ஆறு வருடங்களுக்கு பிறகு தொழுஉரத்தை 50 கிலோ என்ற அளவிலும், தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து போன்றவற்றை கலந்து 2 கிலோ என்ற அளவிலும் கொடுக்க வேண்டும்.
- பலா மரத்திற்கு அதிகமான அளவில் தண்ணீர் ஊற்றுதல் கூடாது. அதிக வெப்பம் உள்ள நாட்களில் மட்டுமே பலா மரத்திற்கு அதிக தண்ணீர் இட வேண்டும்.
- உரங்களை மே, ஜூன் மாதங்களில் ஒரு முறையும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஒரு முறை என இரண்டு முறை பிரித்து இட வேண்டும்.
- பலா மரங்களுக்கு நல்ல சூரிய ஒளி கிடைக்குமாறு அதன் பக்கவாட்டு கிளைகளை வெட்டி விட வேண்டும். அப்பொழுதான் காய்கள் காய்க்க தொடங்கும். மேலும், அதிகமான காய்களையும் கொடுக்கும்.
- இவ்வாறு நீங்கள் பராமரித்து வந்தால் பலாப்பழம் கொத்து கொத்தாக காய்க்க தொடங்கும்.
- ஒரு கொத்தில் இரண்டு காய்கள் மட்டும் இருந்தால் தான் பலாப்பழம் நன்கு பெரிதாக வளரும். எனவே ஒரு கொத்தில் அதிக காய்கள் இருந்தால் அதிகபட்சமாக 3 காய்களை வைத்துவிட்டு மீதமுள்ள பிஞ்சுகளை அகற்றி விடுங்கள்.
பலாப்பழம் பயிரிடும் முறையும் அதன் பயன்களும்
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |