பன்னீர் ரோஜா செடியில் எப்போதும் பூக்கள் அதிகமாக பூக்க டிப்ஸ்..!

Advertisement

பன்னீர் ரோஜா வளர்ப்பு

ரோஜாவில் எண்ணற்ற வண்ணங்கள் இருப்பது நமக்கு தெரியும். அதாவது மஞ்சள், சிவப்பு, ரோஸ் மற்றும் ஆரஞ்சு என இத்தகைய நிறங்கள் இருக்கிறது. அந்த வகையில் ரோஜாவில் எப்படி நிறைய வண்ணங்கள் இருக்கிறதோ, அதேபோல இதில் பல வகைகளும் இருக்கிறது. ஆகையால் ஒவ்வொரு செடியை வளர்க்கும் போது சரியான பராமரிப்பு முறையில் வளர்க்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு பூச்செடியும் பூக்கும் காலம் முதல் மொட்டுக்கள் வைக்கும் காலம் வரை என பல வகைகளில் வேறுபட்டு தான் இருக்கிறது. இதன் படி சரியான முறையில் பூக்களை வளர்த்தாலும் கூட அதில் பூக்கள் அதிகமாக பூக்க செய்வது என்பது சற்று கடினமான ஒன்று. அதனால் இன்று பன்னீர் ரோஜா பூக்கள் எப்போதும் அதிகமாக பூக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பன்னீர் ரோஜா அதிகமாக பூக்க:

பன்னீர் ரோஜா செடியை முதலில் சரியான மண் கலவை செய்து நடவு செய்ய வேண்டும். அதேபோல் பன்னீர் ரோஜா செடிக்கு வெயில் என்பது மிகவும் முக்கியம். அதனால் வெயில் வெளிச்சம் இருக்கும் இடமாக பார்த்து பன்னீர் ரோஜா செடியை வைய்யுங்கள்.

இத்தகைய முறையில் செடியை வைத்தால் போதும் நன்றாக துளிர் விட்டு வளர ஆரம்பிக்கும்.

உரம்:

  • நிலக்கடலை- 25 கிராம்
  • கடுகு- 25 கிராம்

பன்னீர் ரோஜா அதிகமாக பூக்க

ஒரு மிக்சி ஜாரில் மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு பொருளையும் சேர்த்து நன்றாக பவுடர் போல அரைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு மூடி போட்ட பாட்டிலில் இந்த பவுடரை சேர்த்து அதனுடன் 1 லிட்டர் தண்ணீரையும் சேர்க்க வேண்டும்.

அதன் பிறகு இந்த தண்ணீரை 10 நாட்கள் வரை அப்படியே வைத்து விட வேண்டும். 10 நாட்கள் கழித்து தயார் செய்து வைத்துள்ள கரைசலில் 1 டம்ளர் எடுத்துக்கொண்டு அதனுடன் 5 டம்ளர் பச்சை தண்ணீரையும் சேர்த்து நன்றாக கலந்து பன்னீர் ரோஜா செடிக்கு ஊற்ற வேண்டும்.

இதனை மட்டும் உரமாக அளித்தால் போதும் பன்னீர் ரோஜா செடியில் பூக்கள் கூடா கூடாய் பூத்து குலுங்கும்.

சின்னதாக இருக்கும் முல்லை செடியிலும் 1000 மொட்டுகள் வரை வைக்க பழைய சோறு மட்டும் போதும் 

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement