Pappali Maram Athigam Kaikka Tips in Tamil
பொதுவாக இன்றைய சூழலில் அனைவருக்குமே செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் மற்றும் விருப்பம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பப்பாளி மரம் பலரது வீட்டில் வளர்க்கிறார்கள். ஏனென்றால், இதில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது. அதாவது உடல் எடை குறைய, உடலில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்க பப்பாளி உதவுகின்றது. சிலரது வீட்டில் ரொம்ப நாட்களாக பப்பாளி மரம் இருக்கும். ஆனால் அதில் மாவு பூச்சி தாக்கி பப்பாளி அதிகமாக காய்திருக்காது. இன்னும் ஒரு சிலரது வீட்டில் பூக்கள் அதிகமாக பூக்கும் ஆனால் காய்களே காய்ந்திருக்காது.
இப்படி உங்க வீட்டில் உள்ள பப்பாளி மரத்திலேயும் அதிக அளவு காய்கள் காய்க்கவில்லையா..? அப்படியென்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்க வீட்டில் இருக்கும் பப்பாளி மரத்தில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Organic Fertilizer for Papaya Tree in Tamil:
சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்கும் மிகவும் பிடித்த பழங்களில் இந்த பப்பாளி பழமும் ஒன்று. அதனால் இதனை பலரும் தங்களின் வீட்டில் விரும்பி வளர்ப்பார்கள். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் பப்பாளி மரத்தில் அதிக அளவு காய்கள் காய்க்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
உரத்திற்கு தேவையான பொருட்கள்:
- பழைய சாதம் – 1 கப்
- பெருங்காயத்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- வேப்பம் புண்ணாக்கு – 2 கைப்பிடி அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
கத்திரிக்காய் செடி தாறுமாறாக காய்கள் காய்க்க இதை 1 கிளாஸ் ஊற்றுங்கள் போதும்
செய்முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் பழைய சாதத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கினையும் சேர்த்து 9 நாட்கள் நன்கு ஊறவிடுங்கள்.
பின்னர் அதில் உள்ள தண்ணீரை மட்டும் நங் வடிக்கட்டி எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூளினை சேர்த்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள்.
இப்பொழுது இதனை உங்கள் பப்பாளி மரத்தில் உள்ள மாவு பூச்சிகளின் மீது ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் பப்பாளி மரத்தில் உள்ள அனைத்து பூக்களும் காய்களாக மாறுவதை நீங்களே காணலாம்.
1 கிளாஸ் இதை ஊற்றுங்க போதும் பூக்காத மல்லிகை செடியையும் கிலோ கணக்கில் பூத்து குலுங்கும்
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |