பப்பாளி சாகுபடி முறை
தமிழகத்தில் பலரும் பப்பாளியை சாகுபடி செய்து வருகிறார்கள். அதிலும் பப்பாளி சாகுபடி நல்ல லாபத்தை தரக்கூடிய தொழிலாக உள்ளது. பப்பாளியை பல வகையான முறையில் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த பதிவில் எளிமையான பொருட்களை வைத்து பப்பாளி சாகுபடி செய்வதை பற்றி பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
பப்பாளி நடவு முறை :
பப்பாளி நடவிற்கு 1 1/2 அடி அகலம் மற்றும் 1 1/2 நீளம் இருக்க வேண்டும். குழி வெட்டி 10 நாட்கள் ஆறப்போட்டு பிறகு தான் நடவு செய்ய வேண்டும். ஏனெனில் இதற்கு இரண்டு காரணம் அந்த மண்ணில் பூஞ்சைகள் வெயிலில் கருகி இறந்து விடும். மற்றோன்று காற்றோட்டமான சூழ்நிலையில் வைத்தால் மண்ணில் உள்ள துகள்கள் பெரியதாக மாறி பப்பாளி வேர்கள் மண்ணுக்குள் இறக்குவதற்கு உதவுகிறது.
சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி முறை..!
எந்தெந்த முறை குழி அகலம் செய்தல் :
6 அடி பயிருக்கும் மற்றும் 6 அடி வரிசைக்கும் சம அளவு குழியை வெட்ட வேண்டும். இப்படி செய்வதால் ஒரு ஏக்கருக்கு 120 பப்பாளி கன்றுகளை நடவு செய்யலாம். பப்பாளி நடவு செய்யும் போது இடைவெளி சரியாக அமைப்பது அவசியம்.
பப்பாளி நடவு செய்யும் காலம் :
பப்பாளி 1 1/2 ஆண்டுகள் வாழக்கூடிய பயிர் ஆகும். இதை பப்பாளி நடவு செய்து 5 அல்லது 6 மாதத்தில் பப்பாளி காய்களை பறித்து விடலாம்.
பப்பாளி பயிரிடும் முறை :
பப்பாளி நடவிற்கு 1 1/2 அடி அகலம் மற்றும் 1 1/2 நீளத்தில் மங்கி போன சறுகுகள், மற்றும் வேப்ப சறுக்குகளை போட வேண்டும். இந்த சறுக்குகளை போடுவதால் மண்ணில் இருக்கும் தீமைகளை அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. அது மட்டுமில்லாமல் பயிரின் ஊக்கத்திற்கு சறுக்குகள் உரமாக பயன்படுகிறது. அதுபோல ஒரு குழிக்கு 2 கிலோ மங்கி போன சாணம் அல்லது ஆட்டு சாணம் போட்டு கலந்து வைத்து கொள்ள வேண்டும்.
உங்க வீட்டு செடியில் உள்ள பூச்சிகள் நீங்க வெறும் 5 மில்லி போதும்..! அதுவும் இயற்கை முறையில்..!
பிறகு குழியில் மங்கி போன சறுக்குகள் மற்றும் சாணத்தை போட வேண்டும். அதனுடன் 10 கிராம் சூடோமோனாஸ் என்ற உரத்தை போடுவதன் மூலம் இலை வாடுவதை தடுப்பதற்கும் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு இந்த உரம் பெரிதும் உதவுகிறது. அது போல பப்பாளியை செடியை நடவு செய்யும் போது 45 டிகிரி சாய்வாகத்தான் நடவு செய்ய வேண்டும். அடுத்தது 4 அல்லது 5 மாதத்தில் பப்பாளி மரமாக மாறிவிடும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |