அதிக விளைச்சலை அள்ளி தரும் ஓலா முறை நீர்ப்பாசனம்!

Advertisement

ஓலா முறை நீர்ப்பாசனம் | Pitcher Irrigation in Tamil 

நீர்ப்பாசன முறைகள் நிறைய இருக்கின்றது, ஒவ்வொரு முறைகளும் ஒவ்வொருவிதமான யுக்திகளை கையாளுகின்றது. அனைத்துமே தண்ணீரை எப்படி சேமிப்பது என்பதை பற்றி தான் விளக்குகின்றது. நமக்கு தண்ணீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நமது வாழ்க்கையில் இருக்க கூடிய தண்ணீர் இல்லையென்றால் நம்மால் ஒன்றுமே செய்யமுடியாது. நமக்கு தான் தண்ணீர் நிறைய இருக்கின்றதே என்று தாறு மாறாக பயன்படுத்தக்கூடாது, ஏதோ ஒரு கட்டத்தில் தண்ணீர்காக நாம் தவித்து நின்றிருப்போம், அந்த நிலையில் தான் நமக்கு தண்ணீரின் அருமை தெரியும்.

நாம் இப்பொழுது தண்ணீர் சேமிக்க ஆரம்பித்தால் தான் வருங்கால சங்கதியினருக்கு கொஞ்சமாவுது இது கிடைக்கும். அப்படி தண்ணீர் சேமிக்க ஒரு சிறந்த பாசன முறை Pitcher irrigation அதாவது ஓலா பானை முறை நீர்ப்பாசனம் ஆகும். இந்த நீர்ப்பாசனம் மூலம் நீங்கள் குறைந்த தண்ணீரில் அதிக விளைச்சலை பார்க்கலாம்.

Pitcher Irrigation in Tamil

தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து அதை திறம்பட பயன்படுத்துவதற்கு நம்முடைய முன்னோர்கள் பல்வேறு பாசன நுட்பங்களை கையாண்டனர். அவற்றில் மிகவும் பயனுள்ள நீர்ப்பாசன நுட்பம் பிட்சர் அல்லது ஓலா பாசனம் ஆகும், இந்த முறையானது மண் பானையை நிலத்தில் புதைத்து அதிலிருந்து தண்ணீர் அனைத்து இடத்திற்கும் பரவும் முறையாகும்.

இந்த ஓலா பாசனம் முறை வறண்ட காலங்களில் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஓலா பாசனம் என்றால் என்ன? | What is Pitcher irrigation in Tamil 

பண்டைய காலத்திலிருந்து ஒரு மிதமான, கனரக நீர்ப்பாசன முறையை பிட்சர் அல்லது ஓலா பாசனம் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையை பயன்படுத்தி தண்ணீர் தட்டுப்பாடுள்ள பகுதிகளுக்கும், சமப்படுத்த முடியாத நிலப்பகுதிகளுக்கும் தண்ணீரை கொண்டு சேர்க்கலாம்.

இந்த pitcher irrigation-ல் படர கூடிய காய்கறி பயிர்கள் நல்ல விளைச்சலை தரும், அது என்னனா செடிகள் என்றால் தர்பூசணி, பூசணி, பாக்கு, சுரைக்காய் மற்றும் பீர்கங்காய் போன்ற செடி கொடிகளை பயிரிடலாம். சிறிய தோட்டங்கள் மற்றும் கொல்லைப்புறங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சிறிய அளவில் வளர்க்க இந்த நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.

ஓலா பானை நீர்ப்பாசனம் | குட நீர்ப்பாசனம்

ஓலா பானை என்பது களிமண்ணால் செய்யப்பட்ட உயர் வெப்பநிலை கொண்ட கடினமான பானை ஆகும், அதில் சிறிய துகள்கள் இருக்கும். இது ஒரு தட்டையான மேற்பரப்பு மண் பானை.  7-10 லிட்டர்  கொள்ளளவு கொண்ட இந்த பானையில் தண்ணீர் நிரப்பி கழுத்துவரை புதைக்க வேண்டும். தண்ணீர் ஆவி ஆகாமல் இருக்க அதனை மூடி வைக்கவேண்டும்.

இந்த பானையை செடிகளின் நடுவே புதைக்க வேண்டும், அப்படி செய்தால் அதிலிருந்து கசியும் நீரானது அனைத்து செடிகளுக்கும் பரவும். தண்ணீர் தீர தீர நாம் அந்த பானையில் தண்ணீர் ஊற்றினால் போதும், செடிகளுக்கு ஊற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை.

எத்தனை முறையில் பானையில் தண்ணீர் ஊற்ற வேண்டும் 

இந்த Pitcher Irrigation-னுக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் அந்த ஓலா பானையில் தண்ணீர் ஊற்றினாலே போதும். இந்த தண்ணீருடன் நீரில் கரையும் உரங்கள் இருந்தாலும் அதனை இதில் கலந்து விடலாம், அதுவும் இந்த செடிகளுக்கு சென்று விடும்.

இந்த ஓலா பானை நீர்ப்பாசன முறையை சீனா, பிரேசில், ஈரான்  போன்ற நாடுகளில் செய்து வருகிறார்கள்.

Pitcher Irrigation Advantages and Disadvantages in Tamil 

ஓலா முறை நீர்ப்பாசனம் நன்மைகள் மற்றும் தீமைகள்

நன்மைகள்:

  • குறைந்த விலை மற்றும் பயன்படுத்த எளிதானது முறையாகும்.
  • இந்த முறை பல்வேறு பயிர்களுக்கு ஏற்றதாகும்.
  • ஊட்டச்சத்து திறன், ஏனென்றால் பானையில் உள்ள தண்ணீருடன் நாம் உரங்களையும் சேர்ப்பதனால்.

தீமைகள்:

  • இந்த முறையானது சிறிய அளவிலான பண்ணைகளுக்கு மட்டுமே உதவும்.
  • ஒரு வேலை பானை உடைந்தால் அதனை மாற்ற வேண்டியதிருக்கும்.
  • பானையில் எவ்ளோ நீர் இருக்கின்றது என்று தினமும் பார்க்கவேண்டும்.

சொட்டு நீர் பாசனம் – முழு விளக்கம்..!Sottu Neer Pasanam..!

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement