மாதுளை செடியில் காய்கள் அதிகம் காய்க்க இதை மட்டும் செய்யுங்க..!

Advertisement

Pomegranate Plant Grow Tips

இன்றைய கால கட்டத்தில் அனைவருமே வீட்டு மாடியில் மாடி தோட்டம் அமைத்து அனைத்து செடிகளையும் வளர்த்து வருகிறார்கள். இன்னும் சொல்லபோனால் வீட்டு மாடியில் விவசாயமே செய்து வருகிறார்கள் என்றே கூறலாம். அதனால் பலருக்கும் வீட்டை சுற்றி அழகான செடிகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு பூச்செடிகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

சிலர் பழங்கள் தரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி வளர்க்கும் செடிகளில் மாதுளை செடியும் ஓன்று. இது இன்றைய நிலையில் பல வீடுகளில் காணப்படுகிறது. அந்த வகையில் இந்த பதிவின் வாயிலாக மாதுளை செடி வளர்ப்பது எப்படி..? காய்கள் அதிகமாக காய்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

மாதுளை செடி வளர்க்கும் முறை:

மாதுளை செடி வளர்க்கும் முறை

இந்த மாதுளை செடியை விதை மூலமாகவும் வளர்க்கலாம் அல்லது நர்சரியில் இருந்து செடியாக வாங்கி வந்தும் வளர்க்கலாம். விதை மூலம் வளர்த்தால் மாதுளை செடியில் காய்கள் காய்க்க 2 வருடத்திற்கு மேல் ஆகும். ஆனால் நர்சரியில் இருந்து வாங்கி வந்து வளர்த்தால் 1 வருடத்தில் காய்கள் காய்க்கும்.

இந்த செடி எந்த மண்ணில் வேண்டுமானாலும் வளரக்கூடியது. நர்சரியில் இருந்து வாங்கி வந்து வளர்க்கும் செடியை நிலத்தில் வளர்க்க வேண்டும் என்றால், அதற்கு முதலில் போதுமான அளவு குழி தோண்ட வேண்டும்.

பின் அந்த குழியில் மாட்டு உரம், மண்புழு உரம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு இவை அனைத்தையும் போட்டு அந்த மண்ணை கிளறி விட வேண்டும். பின் மாதுளை செடியை குழிக்குள் வைத்து மூடி, போதுமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

இந்த செடிக்கு சூரிய வெளிச்சம் அதிகம் தேவை. அதனால் சூரிய ஒளிப்படும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும். மாதுளை செடிக்கு போதுமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். வாரத்திற்கு 3 முறையும் தண்ணீர் ஊற்றலாம். இதுபோல செய்தால் செடி வேகமாக வளர ஆரம்பிக்கும்.

கொய்யா மரத்தில் அதிக காய்கள் காய்க்க இதை மட்டும் செய்யுங்க..!

மாதுளை செடியில் காய்கள் அதிகம் காய்க்க டிப்ஸ்:

மாதுளை செடியில் காய்கள் அதிகம் காய்க்க டிப்ஸ்

இந்த செடியில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டர் தண்ணீரில் 5 ml வேப்ப எண்ணெய் கரைசலை கலந்து செடிகளின் மேல் தெளிக்க வேண்டும். இதுபோல செய்தால் பூச்சி தாக்குதல் இருக்காது.

செடியில் மொட்டுக்கள் வைக்கும் நேரத்தில் 7 கப் தண்ணீரில் 1 கப் புளிச்ச மோரை கலந்து அதை செடிகளின் வேர் பகுதியில் மற்றும் செடிகளின் மேல் தெளித்து விடலாம். மேலும் தண்ணீரில் மோர் மற்றும் பெருங்காயத்தூள் கலந்து செடிகளின் மேல் தெளித்தது விடலாம். இதுபோல செய்வதால் பூக்கள் உதிராமல் இருக்கும்.

இந்த செடிக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை உரம் கொடுக்க வேண்டும். அதுபோல வாழைப்பழ தோலை வெயிலில் காயவைத்து கொள்ளுங்கள்.

பின் அதை மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் காபி தூள், முட்டை ஓடு இவை மூன்றையும் தூளாக அரைத்து மாதுளை செடியின் வேர்ப்பகுதியில் இருக்கும் மண்ணை கிளறிவிட்டு இந்த தூளை போட வேண்டும். பின் மறுமுறையும் மண்ணை கிளறி விட வேண்டும்.

இதுபோல செய்தால் மாதுளை செடி நன்றாக வளர்ந்து காய்கள் அதிகமாக காய்க்க ஆரம்பிக்கும்.

செலவே இல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளை வளர்ப்பதற்கு இப்படி செய்யுங்க..!

 

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டு செடிகளை வளர விடாமல் தடுக்கும் பூச்சிகளை விரட்ட இந்த ஒரு கரைசல் போதும்..!

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement