Pomegranate Plant Growing Tips in Tamil
பொதுவாக நம் எல்லாருக்குமே பழங்கள் என்றால் பிடிக்கும். பழங்கள் எல்லாவற்றிலும் சத்துக்கள் அதிகமாகவே இருக்கின்றது. என்ன தான் பழங்களில் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் பழங்களை இரசாயன முறையில் பழுக்க வைக்கிறார்கள். இதனால் பழங்கள் வாங்கி சாப்பிடுவதற்கே பலரும் யோசிக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, பலரும் மாடி தோட்டத்தில் குட்டி விவசாயமே நடத்தி வருகிறார்கள். அப்படி மாடித்தோட்டமோ அல்லது வீட்டில் மரம் வளர்க்க ஆசைப்படுபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அதிக சத்துக்கள் கொண்ட பழங்களில் மாதுளைப் பழமும் ஓன்று. அதனால் இன்று நாம் மாதுளை மரத்தில் முத்து முத்தாக காய்கள் காய்க்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!
மாதுளை மரத்தில் முத்து முத்தாக காய்கள் காய்க்க டிப்ஸ்:
டிப்ஸ் -1
முதலில் நாம் செடிக்கு தேமோர் கரைசல் தான் தெளிக்க போகின்றோம். ஏனென்றால் பொதுவாக சில வீடுகளில் மாதுளை செடியில் உள்ள பூக்கள் உதிர்ந்துவிடும். அப்படி உதிர்வதை சரி செய்வதற்கு தேமோர் கரைசலை பயன்படுத்தலாம்.
நாம் தேமோர் கரைசலை மாதுளை செடிகளில் தெளிக்கும் போது, அது பூக்களை உதிர விடாமல் காய்கள் காய்க்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் செடிகளில் பூச்சிகள் வராமல் தடுக்க இக்கரைசல் உதவுகிறது. அதனால் தேமோர் கரைசலை பயன்படுத்தலாம். தேமோர் கரைசல் செய்யும் முறையை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் தேமோர் கரைசல் செய்யும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை
டிப்ஸ் -2
கடலை புண்ணாக்கு வாங்கி அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக ஊறவைத்து கொள்ளுங்கள். பின் அதில் 10 மடங்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துவிடுங்கள்.
இந்த கரைசலை தினமும் மாதுளை செடிக்கு ஊற்றி வரலாம். இதுபோல ஊற்றி வந்தால் மாதுளை செடியில் பூக்கள் பூத்து குலுங்கும். மேலும் பூக்கள் உதிர்வதை தடுத்து காய்கள் அதிகமாக காய்க்கும்.
மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன. |
அதுபோல சிலர் கடலை புண்ணாக்கு கரைசல் ஊற்றினால் பூச்சிகள் வரும் என்று நினைப்பவர்கள் கடலை புண்ணாக்குடன் சிறிதளவு வேப்ப எண்ணெய் கலந்து ஊற்றலாம்.
டிப்ஸ் -3
மூன்றாவதாக நாம் தயிர் கரைசல் தான் ஊற்ற போகிறோம். பொதுவாக தயிரில் செடிகளை பாதுகாக்கும் பண்புகள் அதிகமாகவே இருக்கின்றது. அதனால் நாம் தயிரை மாதுளை செடிக்கு ஊற்றலாம்.
செலவே இல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளை வளர்ப்பதற்கு இப்படி செய்யுங்க
சுத்தமான தயிரை பிரிட்ஜில் வைக்காமல் 7 நாள் வரை வெளியில் வைத்து புளிக்க வைக்க வேண்டும்.
பின் அந்த தயிருடன் போதுமான அளவு தண்ணீர் கலந்து, அந்த நீரை மாதுளை செடியில் ஊற்றலாம். இதுபோல ஊற்றுவதால் செடியில் பூக்கள் அதிகமாக பூத்து காய்கள் அதிகமாக காய்க்கும்.
மேற்கூறிய முறைகளை செய்து வந்தால் மாதுளை மரத்தில் முத்து முத்தாக காய்கள் காய்க்கும்.
இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |