3 நாட்களில் பூக்காத பூச்செடியிலும் பூக்கலை பூக்க வைக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Poochadi Pookalai Pooka Vaipathu Eppadi

பூக்களை பொறுத்தவரை ரோஜாப்பூ, மல்லிகை பூ, முல்லை பூ, செவ்வந்தி பூ மற்றும் கனகாம்பரம் என பல வகையான பூச்செடிகள் இருக்கிறது. இத்தகைய பூச்செடிகளில் அனைத்தினையும் நாம் வீட்டில் வளர்க்கவில்லை என்றாலும் கூட ஒரு சில செடிகளை வீட்டு தோட்டத்தில் வளர்த்து வருவோம். ஆனால் நாள் வளர்க்கும் அனைத்து செடிகளிலும் ஒரே நேரத்தில் பூக்கள் பூப்பது கிடையாது. அதேபோல் ஒவ்வொரு செடிக்கும் நீங்கள் ஒவ்வொரு மாதிரியான உரத்தினை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் இனி நீங்கள் இதுமாதிரி எதையும் செய்ய வேண்டாம். ஏனென்றால் தோட்டத்தில் உள்ள அனைத்து விதமான பூச்செடிகளிலும் பூக்கள் பூத்து குலுங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது:

முதலில் உங்களுடைய தோட்டத்தில் பூச்செடிகளை நடவு செய்யும் போது அதற்கு சற்று இடைவெளி விட்டு தான் நடவு செய்ய வேண்டும். ஏனென்றால் அப்போது தான் சூரிய என்பது கிடைக்கும்.

அதேபோல் எந்த பூச்செடியாக இருந்தாலும் அதில் ஒரு இலை வாடி போகியிருந்தாலும் கூட அதனை உடனே நீக்கி விட வேண்டும். மேலும் வாரம் இரண்டு முறை தவறாமல் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

  • வெந்தயம்- 200 கிராம்
  • வெல்லம்- 300 கிராம்

மல்லிகை செடி வளர்ப்பது எப்படி

இப்போது வெந்தயத்தை நன்றாக ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து விடுங்கள். பின்பு மறுநாள் காலையில் இதனை வடிகட்டி 2 மணிநேரம் காய விடுங்கள். அதன் பிறகு 300 கிராம் வெல்லத்தினை தூளாக செய்து விடுங்கள்.

அடுத்து ஒரு பாட்டிலில் வெந்தயம் மற்றும் வெல்லம் என மாறி மாறி வைத்து 15 நாட்கள் வரை அப்படியே மூடி வைத்து விடுங்கள். பின்பு 15 நாட்கள் கழித்த அந்த பாட்டிலில் கிடைக்கும் தண்ணீரை வடிக்கட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

கடைசியாக இந்த கரைசலுடன் 2 லிட்டர் அளவு தண்ணீர் கலந்து இதனை செடிகளுக்கு கொடுங்கள். இவ்வாறு நீங்கள் 4 நாட்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.

வெந்தயத்தில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆனது நிறைந்து உள்ளது. ஆகையால் இதனை செடிகளுக்கு அளிப்பதன் மூலம் பூக்காத பூச்செடியிலும் பூக்கள் போது குலுங்கும்.

மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..

3 நாட்களில் செம்பருத்தி செடி துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இதை ட்ரை பண்ணுங்க 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement