உங்க வீட்டில் எந்த பூச்செடியாக இருந்தாலும் 10 நாட்களில் அதிகமொட்டுகள் வைக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Advertisement

மல்லிகை பூ அதிகமாக பூக்க

பெண்களுக்கு பூவாக இருந்தாலும் சரி, பூச்செடியாக இருந்தாலும் சரி மிகவும் பிடிக்கும். எல்லாரும் வீட்டிலும் ஒரு பூச்செடியாவது வளர்த்து வருவார்கள். சில நபர்கள் வீட்டில் பூச்செடி வைத்த உடனே பூக்கள் அதிகமாக பூக்கும், சில நபர்கள் வீட்டில் பார்த்து பார்த்து வளர்ப்பார்கள் ஆனால் பூக்கள் பூக்கவே பூக்காது. அதனால் இந்த பதிவில் உங்க வீட்டில் உள்ள எந்த பூச்செடியாக இருந்தாலும் சரி அதிலிருந்து பூக்கள் அதிகமாக பூக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

பூச்செடியில் பூக்கள் அதிகமாக பூக்க:

நீங்கள் தொட்டியில் வைப்பதாக இருந்தால் 15 இன்ச் சைஸ் தொட்டியை வாங்கி கொள்ள வேண்டும்.

கற்றாழை செடி வீட்டில் ஈசியாக வளர்வதற்கு இதை மட்டும் Follow பண்ணுங்க.. 

பின் அதில் 40% மண்புழு உரம், 40% தேங்காய் நார், 20% செடியிலே மண் இருக்கும், 2 கைப்பிடி அளவு செம்மண்  கலந்து கொள்ளவும். எந்த சீஷனாக இருந்தாலும் தண்ணீர் அதிகமாக ஊற்ற கூடாது. ஏனென்றால் தேவைக்கு அதிகமாக தண்ணீர் விடும் போது செடிக்கு அடியில் தங்கிவிடும். நாளடைவில் செடிகள் அழுகி விடும்.

உரம்:

மல்லிகை பூ அதிகமாக பூக்க

கருப்பு உளுந்து தோல் பயன்படுத்தினால் அதை கழுவும் போது வருகின்ற தோல் எடுத்து அரைத்து கொள்ளவும். காய்கறி கழிவுகளையும் பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரை செடிக்கு ஊற்றி மேல் மண்ணை கலந்து விடவும்.

எப்போது ஊற்ற வேண்டும் என்றால் திங்கட் கிழமை உளுந்து தண்ணீர் ஊற்றினால் செவ்வாய்க்கிழமை எதுமே ஊற்ற வேண்டாம், புதன் கிழமை காய்கறி கழுவி தண்ணீர் ஊற்ற வேண்டும், வியாழ கிழமை எண்டபிஹா தண்ணீரும் ஊற்ற கூடாது. இதே போல் மாற்றி மாற்றி ஊற்ற வேண்டும்.

கிளைகளை நறுக்க வேண்டும்:

பூச்செடியில் பூக்கள் அதிகமாக பூக்க

முக்கியமாக செடிகளை அதிகமாக வளர விட கூடாது, ஏனென்றால் அதிகமாக வளர்ந்து விட்டால் மொட்டுகள் அதிகமாக வைக்காது. அதனால் தான் ஓரளவிற்கு வளர்ந்ததும் கிளைகளை நறுக்க வேண்டும்.

மயில் மாணிக்கம் செடி வீட்டில் வளர்க்கும் முறை…

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement