காய்ந்த ரோஜா செடியும் 5 நாட்களில் துளிர்விட்டு பூக்கள் பூத்து குலுங்க வாழைப்பழம் மட்டும் போதும்..!

Advertisement

Pookkatha Rose Sediyil Pookal Pooka

பொதுவாக இந்த உலகில் எவ்வளவு வகையான பூக்கள் இருந்தாலும் கூட சிறியவர் முதல் பெரியவர் முதல் அனைவருக்குமே மிக மிக பிடித்த ஒரு பூவகை என்றால் அது ரோஜா பூக்கள் தான். ஏனென்றால் இதில் பலவகையான நிறங்கள் மற்றும் பார்ப்பதற்கு மற்றவர்களை கவரும் வகையில் இருக்கும். அதனால் அனைவருக்குமே இதனை தங்களது வீடுகளில் மிக மிக விரும்பி வளர்ப்பார்கள். அப்படி நாம் வளர்க்கும் ரோஜா பூச்செடி சரியாக வளராமல் காய்ந்து போகிவிடால் நாம் மிக மிக வருத்தப்படுவோம். அதனால் இன்றைய பதிவில் காய்ந்த ரோஜா பூச்செடியையும் நன்கு வளரவைத்து அதிக அளவு பூக்கள் பூக்க வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க. 

பூக்காத செம்பருத்தி செடியிலும் மலர்கள் பூத்து குலுங்க 1 ஸ்பூன் வெந்தயம் போதுமே

ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர:

Best Fertilizer For Rose Plant in Tamil

முதலில் ஒரு செடி நன்கு வளர வேண்டும் என்றால் அதற்கு நன்கு சூரிய ஒளி கிடைக்க வேண்டும். எனவே தான் நாம் நமது ரோஜா செடியினை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில் நடவு செய்யவேண்டும்.

அதேபோல் காய்ந்து போன ரோஜா செடியின் நுனிப்பகுதியை சிறிதளவு நறுக்கிவிட்டு அதன் மீது சிறிதளவு தொழுஉரத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது அதற்கு என்ன உரம் அளித்தால் அது நன்கு செழித்து வளர்ந்து அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  1. வாழை பழத்தோல் – 4
  2. ஆரஞ்சி பழத்தோல் – 4
  3. முட்டை ஓடு – 4
  4. காபி தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
  5. கடலை புண்ணாக்கு – 1 கைப்பிடி அளவு 

தண்ணீர் இருந்தால் போதும் வீட்டில் வெந்தய கீரை வளர்க்கலாம மண் தேவையே இல்ல

செய்முறை:

வாழைப்பழம்

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 4 வாழை பழத்தோல் மற்றும் 4 ஆரஞ்சி பழத்தோல் ஆகியவற்றை இரண்டு முதல் மூன்று நாட்கள் நன்கு வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 4 முட்டை ஓடுகளையும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் காபி தூள் மற்றும் 1 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதில் இருந்து 1 டீஸ்பூன் எடுத்து உங்கள் ரோஜா செடியின் வேர்களில் போடுங்கள் அதன் பிறகு லேசாக தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். இதனை வாரம் இரண்டு முறை அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் காய்ந்து போன ரோஜா பூச்செடியையும் நன்கு வளரவைத்து அதிக அளவு பூக்கள் பூக்க தொடங்கும்.

குச்சியாக இருக்கும் ரோஜா செடி கூட 3 நாட்களில் துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இந்த ஒரு கரைசல் போதும்

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement