Pookkatha Sembaruthi Sediyil Pookal Pooka
செம்பருத்தி செடி தானே எந்த இடத்தில் வைத்தால் என்ன பூத்து விடும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு தோன்றும். ஆனால் இவ்வாறு நாம் நினைப்பது தான் தவறு. ஏனென்றால் செம்பருத்தி பூ செடியையும் நாம் சரியான முறையில் பராமரித்து வந்தால் மட்டுமே அதில் நாம் நினைத்த மாதிரியான பூக்களை பூக்க செய்யலாம். அப்படி பார்த்தால் எந்த உரத்தை செம்பருத்தி செடிக்கு கொடுப்பது என்றும், அதனை எத்தகைய முறையில் கொடுப்பது என்றும் இதுபோன்ற விவரங்களை தெரிந்து இருக்க வேண்டும். அதனால் இன்றைய பதிவில் செம்பருத்தி செடி வைத்து இருக்கும் அனைவருக்கும் உதவும் வகையில் ஒரு அருமையான டிப்ஸினை பார்க்கலாம் வாங்க. மேலும் டிப்ஸினை பின்பற்றுவதன் மூலம் செம்பருடர்த்தி செடியில் பூக்கள் பூத்து குலுங்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
செம்பருத்தி செடி நன்றாக வளர:
செம்பருத்தி செடி நன்றாக வளர வேண்டும் என்றால் அதற்கு போதுமான அளவு சூரிய ஒளி ஆனது தேவைப்படுகிறது. ஏனென்றால் சூரிய ஒளியில் செடி ஆனது பட்டால் மட்டுமே நன்றாக வளரும்.
ஆகையால் வெயில் குறைவாக இருக்கும் பகுதிகளில் நாடாமல் இருப்பதே நல்லது. மேலும் செம்பருத்தி செடியில் ஏதேனும் ஓரிரு இலைகள் தனித்தனியாக இருந்தாலும் கூட அதனை உடனே நறுக்கி அல்லது வெட்டி விடுங்கள்.
ஏனென்றால் இதுபோன்ற தனி இலைகளும் செம்பருத்தி பூ வளர்ச்சியினை ஏதோ ஒரு வகையில் பாதிக்கக்கூடியதாக இருக்கக்கூடும்.
பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியும் பூத்து குலுங்க 1 துண்டு இஞ்சி போதும்
காய்ந்த ரோஜா செடியும் 5 நாட்களில் துளிர்விட்டு பூக்கள் பூத்து குலுங்க வாழைப்பழம் மட்டும் போதும்
செம்பருத்தியில் அதிக பூக்கள் பூக்க வெந்தயம்:
வெந்தயத்தில் மனிதர்களுக்கு தேவையான சத்துக்கள் இருப்பது போலவே பூச்செடிகளுக்கு தேவையான சத்துக்களும் நிறைந்து இருக்கிறது. அதனால் 2 ஸ்பூன் வெந்தயத்தை முதலில் எடுத்துக்கொண்டு அதனை பவுடர் போல அரைக்கவும்.
பின்பு அரைத்து வைத்துள்ள வெந்தய பவுடரில் சிறிதளவு எடுத்துக்கொண்டு செம்பருத்தி செடியின் மண்ணிற்கு அருகில் போட்டு தண்ணீர் ஊற்றி விடுங்கள். இப்படி செய்வதனால் பொட்டாசியம் சத்து அதிகமாக கிடைக்கும்.
மேலும் 1 ஸ்பூன் வெந்தய பவுடரில் சிறிதளவு தண்ணீரை கலந்து அந்த தண்ணீரை செடிகளின் மீது தெளித்து வருவதன் மூலம் செடி செழிப்பாக வளர்ந்து அதிகமாக மலர்கள் பூக்க செய்யும்.
தண்ணீர் இருந்தால் போதும்.. வீட்டில் வெந்தய கீரை வளர்க்கலாம்…மண் தேவையே இல்ல ..
3 சென்டில் 7 நாட்களில் வீட்டிலேயே கீரையை செழிப்பாக வளர வைக்க என்ன செய்யனும் தெரியுமா
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |