Prevent Insects From Attacking Flower Plants
பலருக்கும் வீட்டை சுற்றி அழகழகான செடிகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நர்சரியில் இருந்து காசு செலவு செய்து அழகிய பூச்செடிகளை வாங்கி வந்து வளர்ப்பார்கள். அந்த பூச்செடிகளை ஒவ்வொரு நாளும் பூச்சிகள் தாக்காமல் பார்த்து பார்த்து வளர்ப்பார்கள். அப்படி பார்த்து கொண்டாலும் சில நேரங்களில் பூச்சிகள் செடிகளை தாக்கி விடுகின்றன. அதனால் பூச்செடிகளில் பூக்களும் பூக்காமல் செடிகளும் வளராமல் போய்விடுகிறது என்று சொல்லி புலப்புபவர்களா நீங்கள்..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..! இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!
வருடம் முழுவதும் பூக்கள் பூக்கும் பூச்செடிகள் எது..? |
பூச்செடிகளை பூச்சிகள் தாக்காமல் இருக்க டிப்ஸ்:
பூச்செடிகளில் பூக்கள் அதிகமாக பூக்கவும் செடிகள் நன்றாக வளர வேண்டும் என்று அனைவருமே நினைப்போம். பூச்சிகளை விரட்ட வேண்டும் என்பதற்காக சில பூச்சி மருந்துகளை செடிகளில் தூவி விடுவோம். இதனால் செடிகள் மொத்தமாக அழிந்து விடுகிறது.
அதனால் இயற்கையான முறையில் பூச்சிகளை விரட்ட உரம் எப்படி தயாரிப்பது என்று இங்கு பார்ப்போம்.
- வேப்ப எண்ணெய் – 2 ஸ்பூன்
- டிஷ் வாஷ் லிக்விட் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
- பெருங்காய தூள் – 1/2 ஸ்பூன்
பூச்செடிகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க போதும்..! |
வேப்ப எண்ணெய் எடுத்து கொள்ளவும்:
வேப்ப எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வந்து ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றி கொள்ளவும்.
பின் அதில் உங்கள் வீட்டில் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் டிஷ் வாஷ் லிக்விட் 1 ஸ்பூன் அளவிற்கு தண்ணீரில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் மஞ்சள் தூள் 1 ஸ்பூன் மற்றும் 1/2 ஸ்பூன் அளவுக்கு பெருங்காய தூள் சேர்த்து அதனுடன் 100 ml அல்லது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் இதை ஒரு பாட்டிலில் ஊற்றி செடிகளுக்கு ஸ்பிரே செய்ய வேண்டும். இதுபோல செய்து வந்தால் உங்கள் வீட்டு பூ செடிகளில் இருக்கும் பூச்சிகள் அழிந்துவிடும். மேலும் பூச்சிகள் வராமலும் தடுக்கும்.
வேப்ப எண்ணெய்க்கு பூச்சிகளை அளிக்கும் தன்மை இருக்கிறது. அதுபோல மஞ்சள் தூள் பூச்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். பெருங்காயத்தூள் எதற்கு என்றால் செடிகளில் வெள்ளை நிறத்தில் பூச்சிகள் இருக்கும் அல்லவா அதை அளிக்கும் திறன் இதற்கு இருக்கிறது. இவை அனைத்தும் செடிகளுக்கு பூச்சிகள் வராமல் தடுக்கிறது.
இதையும் படித்துப்பாருங்கள்=> செடிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க இதை மட்டும் செய்யுங்கள்..!
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |