Pudina Chedi Valarpathu Eppadi
நாம் என்ன சமையல் செய்தாலும் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா மற்றும் இஞ்சி ஆனது கண்டிப்பாக தேவைப்படும். இதனுடைய தேவை என்பது அதிகமாக இருப்பதனால் அனைவரும் கறிவேப்பிலை மற்றும் கொத்த மல்லி செடியினை வீட்டிலேயே வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் இனி நீங்கள் புதினா செடியினையும் வீட்டிலேயே சுலபமான முறையில் வளரக்கலாம். எனவே இன்றைய பதிவில் வீட்டிலேயே இயற்கையான முறையில் புதினா செடி தள தளவென வளர்ப்பது எப்படி என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். மேலும் இத்தகைய முறைக்கு நீங்கள் எந்த செலவினையும் செய்ய வேண்டியது இல்லை. சரி வாருங்கள் பதிவை தொடர்ந்து படிக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
புதினா செடி வளர்ப்பு:
முதலில் 1 கைப்பிடி அளவு புதினா இலையினை வாங்கி கொள்ளுங்கள். அதன் பிறகு ஒவ்வொரு புதினா தண்டிலும் கீழே சிறிது இடம் விட்டு நறுக்கி கொண்டு அதில் இருக்கும் பெரிய இலைகள் அனைத்தினையும் நீக்கி விடுங்கள்.
மேலே சொல்லப்பட்டுள்ள முறையில் அனைத்து புதினா செடிகளையும் செய்து விடுங்கள்.
- மாட்டுச்சாணம்- 1 கைப்பிடி அளவு
- கோகோபீட்- 1 கைப்பிடி அளவு
- தரமான மண் கலவை- 1 கைப்பிடி அளவு
- பிளாஸ்டிக் பாத்திரம்
இப்போது பிளாஸ்டிக் பாத்திரத்தில் முதலில் தரமான மண் கலவை பின்பு 1 கைப்பிடி அளவு மாட்டுச்சாணம், கோகோபீட் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். அடுத்து நீங்கள் இவை அனைத்தினையும் ஒன்றோடு ஒன்றாக சேருமாறு கலந்து கொள்ளுங்கள்.
கடைசியாக கலந்து வைத்துள்ள கலவையில் நறுக்கி வைத்துள்ள புதினா செடிகளை உங்களுடைய கையினால் நடவு செய்து விடுங்கள். பின்பு நட்டு வைத்துள்ள புதினா செடிகளின் மீது லேசாக தண்ணீர் தெளித்து விடுங்கள்.
3 நாட்களில் செம்பருத்தி செடி துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இதை ட்ரை பண்ணுங்க
புதினா செடிக்கு ஈரப்பதம் இருக்க வேண்டும், ஆனால் தண்ணீர் அதிகமாக ஊற்றக்கூடாது. ஆகையால் தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.
அதேபோல் அதில் ஒரு இலைகள் காய்ந்து இருந்தாலும் கூட அதனை உடனே நறுக்கி விடுங்கள். இப்படி செய்வதனால் புதினா செடி துளிர்விட்டு தள தளவென வளர ஆரம்பிக்கும்.
மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..
வைத்த 5 நாட்களிலே ரோஜா செடி துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இதை try பண்ணுங்க
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |