Pudina Sedi Valara
பொதுவாக புதினாவை வெஜ் பிரியாணி, நான்வெஜ் பிரியாணி போன்றவற்றிற்கு பயன்படுத்துவார்கள். இதனை பயன்படுத்துவதால் வாசனையாக இருக்கிறது என்பதோடு மட்டுமில்லாமல் ருசியாகவும் இருக்கும். இதனை பெரும்பாலும் கடையில் தான் வாங்கி வருவோம். அப்படியே வாங்கி வைத்தாலும் மூன்று நாட்களுக்கு மற்றும் தான் பயன்படுத்த முடியும். அதுவே பிரிட்ஜ் இருந்தால் ஒரு வாரத்திற்கு பயன்படுத்தலாம். கடையில் வாங்கும் புதினாவானது கெமிக்கல் நிறைந்த உரங்களை போட்டு வளர்த்திருப்பார்கள். நீங்கள் வீட்டிலேயே இயற்கையான முறையில் புதினா செடி வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வீட்டிலேயே புதினா செடி வளர்ப்பது எப்படி.?
புதினா செடி வளர்ப்பதற்கு புதினா செடி தண்டுகளை எடுத்துகொள்ளவும். கீழே உள்ள தண்டுகளில் இலைகள் இல்லாமல் எடுத்து கொள்ளவும். முனையில் மட்டும் 2 இலைகள் இருப்பது போல எடுத்து கொள்ளவும்.
நடும் முறை:
தொட்டியில் தேங்காய் நார் கழிவுகள் 30%, மண்புழு உரம் 30%, செம்மண் 40%, மாட்டு எருது ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு அதில் எடுத்து வைத்துள்ள புதினா செடியானது 2 இன்ச் மண்ணிற்கு உள்ளே போவது போல் நடவும்.
அதன் பிறகு தொட்டியின் மேல் ஒரு கேரி பேக்கை போட்டு மூடி விடவும். செடிக்கு காற்றோட்டம் போகும் வரையில் இரண்டு ஓட்டைகளை போட்டு கொள்ளவும்.
அதன் பிறகு ஐந்து நாட்கள் கழித்து பார்த்தால் புதினா செடியானது துளிர் விட்டிருக்கும்.
வைக்கும் இடம்:
புதினா செடியை அதிகமாக வெயில் படும் இடங்களிலோ அல்லது சூரிய ஒளி நேரடியாக படும் இடங்களிலோ வைக்கக்கூடாது. அதாவது மிதமான சூரிய ஒளியில் புதினா செடியை வைக்க வேண்டும்.
இதனால் காலை வெயில் படுமாறும், மதிய நேரத்தில் வெயில் படாதவாறும் வைத்து கொள்ளவேண்டும். இப்படி வைத்த பிறகு 20 நாட்கள் கழித்து பார்த்தால் புதினா செடி வைத்த தண்டு அனைத்திலும் இலைகள் வந்திருக்கும்.
சூரிய வெளிச்சமும், தண்ணீரும் இருந்தால் புதினா செடி நன்றாக வளரும்.
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |