உங்கள் வயலை புகையான் பாதிப்பில் இருந்து பாதுகாக்க….இதை ட்ரை பண்ணுக…

புகையான் தாக்குதல் 

“இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்” இதனை கூறும்போது இனிமையாக இருக்கலாம். ஆனால் அதற்காக ஒவ்வொரு விவசாயும் படும் கஷ்டங்கள் அதிகம். மனித சமுதாயத்திற்கு உயிர்வாழ உணவை வழங்கும் விவசாயி அதனை பயிர்ச்செய்ய பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. விவசாயத்தின் தண்ணீர் முதல் பூச்சிக்கொல்லி வரை என்ன பல இன்னல்கள். அந்தவகையில் இன்று உங்கள் நெல் வயல்களை புகையான் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சில குறிப்புகள்…

புகையான் தாக்குதல் என்றால் என்ன?

pukaiyan thakkuthalil irunthu nerpayirai pathukakka

புகையான் என்பது ஒரு தத்துப்பூச்சி சாம்பல் நிறத்தில் இருக்கும். கண்ணாடி போன்ற சிறிய இறக்கைகளைக் கொண்டிருக்கும். இந்த பூச்சிகள் நெற்பயிரின் தூர்களில் இருந்து கொண்டு நெற்பயிரின் சாற்றை உறிஞ்சுகிறது. இதனால் பயிர்கள் வட்ட வடிவில் திட்டுதிட்டாகக் காயத் தொடங்கும். பின்னர் எரிந்து புகைந்தார் போல காணப்படும்.

நெல் மணிகளில் பால் பிடிப்பதற்கு முன்பாகவே காய்ந்து விடுவதால் மணிகள் முற்றாமல் பதராகி விடும். வயல்களில் நீர் தேங்கியுள்ள இடங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் போதும் இதன் பாதிப்பு அதிகமாகும். மேலும் நெருங்கி நடப்பட்ட வயல்களிலும் இதன் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இத்தகைய பாதிப்பில் இருந்த நமது பயிரை பாதுகாத்துக்கொள்ள உங்களுக்கு சில இயற்கை குறிப்புகள் இதோ…

புகையான் பாதிப்பில் இருந்து நெற்கதிரை பாதுகாக்க:

pukaiyan thakkuthalil irunthu nerpayirai pathukakka

புகையான் பாதிப்பில் இருந்து உங்கள் வயலை பாதுகாக்க வயல் வரப்புகளை தூய்மையாக வைத்திக்க வேண்டும்.

நடவின் போது நெற்பயிரை நெருக்கமாக நடுவதை தவிர்ப்பதன் மூலம் புகையான் பாதிப்பை குறைக்கலாம்.

புகையான் பாதிப்பை குறைக்க எட்டடிக்கு ஓர் அடி இடைவெளியில் பட்டம் விட்டு நடவு செய்வது சிறந்தது.

புகையான் பாதிப்பை குறைக்க யூரியா போன்ற தழை சத்து உரங்களை மேலுரமாக இடவேண்டும்.

தாக்குதல் துவங்கும் கட்டத்தில் இருக்கும் போது வயலில் உள்ள நீரை நான்கு நாட்களுக்கு வடித்து விட வேண்டும். பிறகு வேம்ப எண்ணெய் கரைச்சல் தெளிக்க வேண்டும்.

புகையானின் தாக்குதல் அதிகமாகும் பொழுது ஏக்கருக்கு

புப்ரோபெசின் 25 எஸ்.சி. – 300 மி.லி.

தையோமீத்தாக்சம் 25 டபிள்யு.ஜி. – 40 கிராம்

இமிடாகுளோபிரிடு 17.8 எஸ்.எல் – 40 மி.லி

இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து நெற்பயிரின் தூர் பகுதியில் நன்கு படும்படி தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு நெற்பயிரில் தோன்றும் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்