கேழ்வரகு சாகுபடி முறை மற்றும் அதன் பயன்கள்..! Ragi cultivation in tamil..!

கேழ்வரகு சாகுபடி

கேழ்வரகு சாகுபடி முறை மற்றும் அதன் பயன்கள்..! Ragi cultivation in tamil..!

கேழ்வரகு சாகுபடி முறை / Ragi cultivation in tamil:- குறுதானிய பயிர்களில் கேழ்வரகு முக்கியமானது. தமிழ்நாட்டில் கிராமப்புற மக்களின் உணவில் கேழ்வரகு முக்கிய இடத்தை பெற்றிருக்கும். இந்த கேழ்வரகில் உடலுக்கு தேவையான புரதம், மாவுச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளது…

மேலும் இதனுடன் இத்துடன் கேழ்வரகில் மிக அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ், பிற நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. மக்கள் இந்த இவற்றில் கேழ்வரகு கூல், கேழ்வரகு பால். கேழ்வரகு களி, கேழ்வரகு தோசை மற்றும் கேழ்வரகு புட்டு என்று பலவகையான உணவுகளை செய்து சாப்பிடுவார்கள். இத்தகைய கேழ்வரகினை விவசாயிகள் பயிரிடுவதினால் அதிக வருமானத்தை பெறலாம்.

இயற்கை விவசாயம் கம்பு சாகுபடி முறைகள்..!Pearl Millet Cultivation in tamil

 

சரி வாங்க இவற்றில் கேழ்வரகு சாகுபடி செய்வது எப்படி மற்றும் கேழ்வரகு பயன்கள் (ragi benefits in tamil) போன்றவற்றை படித்தறிவோம்.

கேழ்வரகு சாகுபடி முறை / Ragi cultivation in tamil..!

கேழ்வரகு ரகங்கள்:-

இந்த கேழ்வரகு சாகுபடி பொறுத்தவரை கோ 11, கே 5, கே 7, கோ 7, ஜி.பி.யு –28, கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14, டி.ஆர்.ஒய் 1, பையூர் 1 ஆகிய இரகங்கள் உள்ளன.

கேழ்வரகு பருவகாலம்:-

இந்த கேழ்வரகு சாகுபடி பொறுத்தவரை டிசம்பர்- ஜனவரி, செப்டம்பர்- அக்டோபர் மாதங்கள் பயிர் செய்ய ஏற்றவை ஆகும்.

நிலம்:-

இந்த கேழ்வரகு சாகுபடி (Ragi cultivation in tamil) பொறுத்தவரை எல்லா வகையான மண்களிலும் பயிர் செய்யலாம் எனினும் செம்மண், மணற்பாங்கான கருமண் நிலம் கேழ்வரகு சாகுபடி முறைக்கு ஏற்ற நிலங்கள் ஆகும்.

விதையளவு:-

இந்த கேழ்வரகு சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு 15-20 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட், 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

நாற்றங்கால் தயாரித்தல்:

இந்த கேழ்வரகு சாகுபடி (Ragi cultivation in tamil) பொறுத்தவரை வறண்ட நிலையில் இருக்கும் பொழுது நிலத்தை தயார் செய்ய வேண்டும். தொழு உரம் இட்டு நன்றாக உழவேண்டும். தேவைப்பட்ட நீளமும், 1மீ அகலமும் கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதைகளை 12 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். விதையை ஈரக்கோணியில் போட்டு 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். விதைப்படுக்கையை சமம்படுத்தி படுக்கையின் மேல் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும். அதற்கு மேல் விதைகளை பரவலாக தூவவேண்டும்.

40 சதுர மீட்டர் பரப்பிற்கு 1.25 கிலோ அளவு விதை போதுமானது. தொழு உரம் மறுபடியும் இட்டு விதைகளை மூடவேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் நீர் பாய்ச்ச வேண்டும்.

நாற்று படுக்கையில், எந்தவித இரசாயன உரங்களையும் இடக்கூடாது. 10-15 நாட்களில், நல்ல வளமான, வீரியமுள்ள நாற்றுக்கள் நடவுக்கு தயாராகிவிடும்.

மல்லிகை பூ சாகுபடி முறைகள்..!

நிலம் தயாரித்தல்:

இந்த கேழ்வரகு சாகுபடி (Ragi cultivation in tamil) பொறுத்தவரை கட்டிகள் இல்லாத அளவுக்கு நிலத்தை நன்றாக உழுது 4 டன் மாட்டு எருவைத் தூவி உழவு செய்து, பாசனம் செய்ய வசதியாக பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். படுக்கை சமமாக இருந்தால் நீர் போக எளிதாக இருக்கும்.

18 முதல் 20 நாட்கள் ஆன நாற்றுகளை 30×10 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 3 செ.மீ ஆழத்தில் ஒரு குத்துக்கு 2 நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நேரடி விதைப்பாக இருந்தால் 22×10 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

நாற்று நடும் முன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்:

இந்த கேழ்வரகு சாகுபடி பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு தழை சத்து, மணி சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகியவற்றை 60:30:30 கிலோ விகிதத்தில் இட வேண்டும்.

அடி உரமாக மணி, சாம்பல் சத்துகளை முழுமையாக இட வேண்டும். தழைச்சத்தை மட்டும் பாதி அளவு இட்டு, மீதமுள்ளவற்றை சரி பாதியாக 23, 30, 40-வது நாட்களில் இட வேண்டும்.

விதைத்த 3 நாட்களுக்கு பிறகு களை முளைக்கும் முன் களைக்கொல்லி தெளிக்க வேண்டும். விதைத்த 20 நாட்களுக்கு பிறகு கையால் களையெடுக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த பிறகு 10, 20 நாட்களில் இருமுறை கையால் களையெடுக்க வேண்டும்.

அறுவடை:

இந்த கேழ்வரகு சாகுபடி பொறுத்தவரை  கேழ்வரகுப் பயிர் ஒரே சீராக முதிர்ச்சியடைவதில்லை. எனவே, இருமுறையாக அறுவடை செய்ய வேண்டும். 50% கதிர்கள் பழுப்பு நிறமடைந்த பிறகு அதை அறுவடை செய்யலாம்.

முற்றிப் பழுப்பு நிறமடைந்த அனைத்து கதிர்களையும் அறுவடை செய்யவேண்டும். தானியத்தைக் காயவைத்து கதிரடித்து தூற்றி சுத்தப்படுத்த வேண்டும்.

முதல் அறுவடைக்குப் பிறகு 7-வது நாளில் அனைத்து தானியக் கதிர்களையும் பச்சையாக இருக்கும் கதிரையும் சேர்த்து அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த தானியங்களை உலர்த்துவதற்கு முன் குவியலாக நிழலில் ஒருநாள் வைப்பதால் வெப்பநிலை அதிகரித்து தானியம் தரமாகும். உலர்ந்த தானியத்தைக் கதிரடித்து புடைத்து, சுத்தப்படுத்தி சாக்குப் பைகளில் சேமிக்க வேண்டும்.

மகசூல்:-

இந்த கேழ்வரகு சாகுபடி பொறுத்தவரை ஏக்கருக்கு 250 – 300 கிலோ மகசூல் கிடைக்கும். கேழ்வரகுடன் துவரை, உளுந்து உள்ளிட்ட பயறு வகைப் பயிர்களை 8:2 விகிதத்தில் ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் அதிக மகசூலுடன், வருமானமும் கிடைக்கிறது.

செண்டு மல்லி பூ சாகுபடி முறை..!

கேழ்வரகு பயன்கள்: 1

இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும்.

கேழ்வரகு பயன்கள்: 2

இந்த கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.

கேழ்வரகு பயன்கள்: 3

இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

கேழ்வரகு பயன்கள்: 4

இதில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

கேழ்வரகு பயன்கள்: 5

இந்த கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது.

கேழ்வரகு பயன்கள்: 6

அதுமட்டுமின்றி, ஒற்றை தலை வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், தசை சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

 

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil