கறிவேப்பிலை சாகுபடி
பொதுவாக சமையலை நிறைவு செய்வது கருவேப்பிலை தான். நாம் அதிக விலைகொடுத்து பல காய்கள் வாங்கினாலும் கடைசியாக நாம் தேடுவது கறிவேப்பிலை தான். காரணம் உணவிற்கு ருசியை கொடுப்பதற்கு கருவேப்பிலை. அதிக சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை கண்டிப்பாக அனைவரின் வீட்டிலும் இருப்பது நல்லது. கறிவேப்பிலை சமையலுக்கு மட்டும் அல்லாமல் வீட்டில் ஒரு கறிவேப்பிலை செடி இருந்தால் போதும் எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து ஒரு புத்துணர்ச்சியை தரக்கூடியது கருவேப்பிலை. இத்தகைய சிறப்புமிக்க கருவேப்பிலையை உங்கள் வீட்டில் நீங்கள் வளர்த்து வந்தால் அது சரியாக வளர வில்லை என்ற கவலை உங்களிடம் இருந்தால் உங்களுக்காக தான் இந்த பதிவு. கருவேப்பிலை வேகமாக வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும் அதன் பயன்கள் என்ன என்பதை இந்த பதிவு முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்..
கருவேப்பிலை செடி வளர்ப்பது எப்படி.?
கறிவேப்பிலையின் தாயகம் இந்தியா. கறிவேப்பிலை தென்னிந்திய மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய வகையாக உள்ளது. கறிவேம்பு அல்லது கருவேப்பிலை என்று அழைக்கப்படும் இது பல மருத்துவ குணங்கள் கொண்டது.
பயிரிடும் முறை:
- ஜூலை – ஆகஸ்ட் மாதங்கள் பயிரிட ஏற்ற மாதங்கள்.
மண்:
- கருவேப்பிலை மகசூலை அதிகரிக்க செம்மண் சிறந்தது.
நடவு செய்யும் முறை:
- கருவேப்பிலை பொதுவாக விதை மூலம் பயிர் செய்வதே சிறந்தது.
- நன்கு பழுத்த பழங்களை தோல் நீக்கி அல்லது அப்படியே நிலத்தில் ஊன்றலாம்.
- விதைத்த 20 நாட்கள் கழித்து முளைக்க ஆரம்பிக்கும்.
- ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வயதுடைய செடிகளை ஊன்றி வளர்க்க வேண்டும்.
- நிலத்தில் செடிகளை நடவு செய்வதற்கு முன்பு மூன்று அல்லது நான்கு முறை நன்றாக உழவு செய்ய வேண்டும்.
- உழவின் பொது நிலத்தில் தொழு உரம் இட வேண்டும்.
- பெரிய செடிகளாக வளர்க்க 2 . 5 மீட்டர் இடைவெளி தேவைப்படும்.குத்துக் செடிகளாக வளர்க்க 1 . 2 மீட்டர் இடைவெளி வேண்டும்.
- செடிகளை நட்டவுடன் நீர் பாய்ச்சுதல் அவசியமாகும். பின்பு நட்ட மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
உரமிடும் முறை :
- 1 அடி ஆழத்தில் சதுர குழிதோண்டி செடிகளை சுற்றி மக்கிய தொழுஉரத்தை சேர்த்து மண்ணுடன் சேர்த்து கிளற வேண்டும்.
- ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் ஒரு செடிக்கு 20 கிலோ தொழுஉரம்மற்றும் மண்புழு உரம் இட வேண்டும்.
- 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை செடிகளுக்கு வேப்ப புண்ணாக்கு வைக்க வேண்டும்.
பராமரிப்பு முறை:
செடிகள் 1 மீட்டர் வளர்ந்தவுடன் நுனிக்கொழுந்தினை கிள்ளி விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் பக்க கிளைகள் வளர்ச்சி அதிகரிக்கும். ஒரு செடிக்கு 5 – 6 கிளைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
நடவு செய்த 6 – ம் மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.
பயன்கள்:
- கறிவேப்பிலை பித்தத்தை தனித்து உடல் சூட்டை ஆற்றும் தன்மை உடையது.
- கருவேப்பிலை மனதுக்கு உற்சாகத்தை தரக்கூடியது.
- குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாள்பட்ட காய்ச்சல் ஆகியவற்றை கருவேப்பிலை குணப்படுத்துகிறது.
- கறிவேப்பிலை சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பலப்படுத்தும்.
- கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி நன்கு வளரும்.
உங்களுக்கு பிடித்த மணி பிளாண்டை எவ்வாறு கவனமாக வளர்ப்பது என்று தெரியுமா…..
-
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம்