ரோஜா செடி துளிர் விட
நம்முடைய வீட்டில் எண்ணற்ற பூச்செடிகள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் இத்தகைய ஆசையை யாராலும் உடனே நிறைவேற்ற முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு செடிக்கும் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் இன்று காய்ந்த ரோஜா செடியினையும் எப்படி செழிப்பாக வளர வைத்து பூக்கள் பூக்க செய்வது என்பது பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இத்தகைய முறையினை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு அதிக அளவு செலவு செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. சரி வாருங்கள் ரோஜா செடியை எப்படி துளிர் விட செய்வது என்று விரிவாக பார்க்கலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ரோஜா செடி தளிர் விட்டு பூக்கள் பூக்க டிப்ஸ்:
முதலில் ரோஜா செடியினை துளிர் விட்டு செழிப்பாக வளர வைக்க உரம் தயாரிக்க வேண்டும். அதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- சாதம்- 1 கைப்பிடி அளவு
- நாட்டு சர்க்கரை- 1 ஸ்பூன்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- மண் பானை- 1
இப்போது அந்த மண் பானையில் 1 கைப்பிடி அளவு சாதத்தை சேர்த்து அதனுடனே 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரையையும் சேர்த்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு துணியினால் பானையை நன்றாக மூடி 2 நாட்கள் வரை வைத்து விடுங்கள். குறிப்பாக இதில் காற்று புகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
2 நாட்கள் கழித்து 2 ஸ்பூன் ஊற வைத்த வெந்தயத்தை எடுத்து மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போன்ற பதத்திற்கு அரைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த பேஸ்டை பானையினை திறந்து போட்டு விட்டு மீண்டும் நன்றாக கட்டி அப்படியே 1 நாள் முழுவதும் வைத்து விடுங்கள்.
கடைசியாக 1 நாட்கள் கழித்து பானையில் உள்ள கலவையை வெளியே எடுத்து விடுங்கள். அதன் பிறகு இந்த கலவையுடன் 10 லிட்டர் தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது தயார் செய்து வைத்துள்ள கரைசலை ரோஜா செடிகளின் மீதும், வேர் பகுதிகளிலும் ஊற்றி விடுங்கள். இத்தகைய கரைசலை அளிப்பதன் மூலம் ரோஜா செடி நன்றாக துளிர் விட்டு வளருவதோடு மட்டும் இல்லாமல் பூச்சிகளின் தாக்கத்தில் இருந்து தப்பித்து பூக்கள் அதிகமாக பூக்கும்.
மாதுளை செடியிலேயே காய்கள் காய்க்க வாரம் 1 முறை இதை ட்ரை பண்ணி பாருங்க
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |