Roja Chedi Valarpu Murai
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவானது ரோஜா செடி வளர்த்து வரும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் வீட்டில் வளர்த்து வரும் ரோஜா செடி ஆனது துளிர் விட்டு அதிகமாக பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தன் பார்க்கப்போகிறோம். ஆகையால் பதிவை முழுவதுமாக படித்து ரோஜா செடி துளிர்விட்டு நிறைய பூக்கள் பூக்க வைப்பதற்கான கரைசலை எப்படி தயாரிப்பது என்பது பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள். மேலும் கரைசலை தயாரிப்பதற்கு என்று செலவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ஆகவே கரைசலை எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ரோஜா செடி துளிர் விட:
ரோஜா செடி துளிர் விட்டு மொட்டுக்கள் அதிகமாக பூக்க வைப்பதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
- முட்டை- 1
- வாழைப்பழத்தோல்- 10
- மூடி போட்ட வாலி- 1
5 நாட்களில் செம்பருத்தி செடியிலிருந்து அதிக பூக்கள் பூப்பதற்கு இதை மட்டும் செய்யுங்க
ரொம்ப இலங்க 7 நாட்களில் ரோஜா செடியில் பூக்கள் தாறுமாறாக பூத்து குலுங்க இதை ட்ரை பண்ணுங்க
இப்போது நீங்கள் ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வாழைப்பழத்தோலினை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் 1 முட்டையினை உடைத்து ஊற்றி ஒரு கரண்டியால் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து அத்தகைய வாலியினை நன்றாக 15 நாட்கள் வரை மூடி வைத்து விடுங்கள். 15 நாட்கள் கழித்த பிறகு அதில் 2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள்.
5 நிமிடம் கழித்த பிறகு இந்த கரைசலை வடிகட்டி கொள்ளுங்கள். கடைசியாக 1 லிட்டர் சாதாரணமான தண்ணீருக்கு 20 மில்லி அளவு இந்த கரைசலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள கரைசலை ரோஜா செடிகளின் மீது ஸ்ப்ரே செய்து விடுங்கள். அதுவும் குறிப்பாக வெயில் வராத நேரமாக இருக்க வேண்டும். ஆகையால் காலை 7 அல்லது மாலை 5 மணியளவில் ஸ்ப்ரே செய்யுங்கள்.
இவ்வாறு நீங்கள் வாரம் 1 முறை செய்து வருவதன் மூலம் ரோஜா செடி ஆனது நன்றாக துளிர் விட்டு மொட்டுக்களை அதிகமாக வைக்க ஆரம்பிக்கும்.
3 நாட்களில் செம்பருத்தி செடி துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இதை ட்ரை பண்ணுங்க
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |