ரோஜா செடி வேகமாக அதுவும் 5 நாட்களில் துளிர் விட செய்ய வேண்டிய டிப்ஸ்..!

Advertisement

Roja Chedi Vegamaga Thulir Vida Tips

ரோஜா செடியை பார்த்தால் யாருக்கு தான் பிடிக்காது. இத்தகைய காரணத்தினாலோ என்னவோ பலரும் அதனை வாங்கி பார்த்து பார்த்து மிகவும் பாதுகாப்பான முறையில் வளர்த்து வருகிறார்கள். இவ்வாறு வளர்த்து வருவது என்பது சரியானதாக இருந்தாலும் கூட அதனை நாம் கடையில் வாங்கி வந்த உடனே பூக்கள் பூக்கும் என்றும், வேகமாக துளிர் விடும் என்றும் நினைப்பது மிகவும் தவறு. ஒருவேளை கடையில் நீங்கள் வாங்கும் போது வேண்டும் என்றால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் அதனை வீட்டில் வாங்கி வளர்க்க ஆரம்பித்தவுடன் தான் வாட தொடங்கும். ஆகையால் இன்றைய பதிவில் வேகமாக ரோஜா செடி துளிர் விட என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

5 நாட்களில் ரோஜா செடி துளிர் விட டிப்ஸ்:

டிப்ஸ்- 1

முதலில் உங்களுடைய ரோஜா செடியில் ஒரு பூக்கள் பூத்தாலும் கூட அதனை உடனே பறித்து விட வேண்டும். ஏனென்றால் ரோஜா செடியை பறிக்காமல் இருப்பது தளிர் விடாமல் தடுக்கும்.

டிப்ஸ்- 2

அதேபோல் ரோஜா தண்ணீர் விடுவதற்கு முன்பாக அதனுடைய மண் பகுதியை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கிளறி விட்டு தண்ணீர் கொடுப்பதன் மூலம் தண்ணீர் நேரடியாக வேர் பகுதிக்கு போய் சேரும்.

டிப்ஸ்- 3

ரோஜா செடி வளர்ப்பு முறை

மேலும் ரோஜா செடிக்கு சாதாரணமான தண்ணீரை அளித்தாலும் கூட பழங்கள், காய்கறிகள் என இதுபோன்ற கழிவுகள் கலந்த தண்ணீரை அளிப்பது என்பது இன்னும் வளர்ச்சியை பல மடங்கு அதிகரிக்கும்.

ஆகவே வாரம் ஒருமுறை இந்த தண்ணீரை அளியுங்கள்.

டிப்ஸ்- 4:

ரோஜா செடிக்கு எப்போதும் காலை அல்லது மாலை 5 மணிக்கு மேல் தான் தண்ணீரை ஊற்ற வேண்டும். ஏனென்றால் வெயில் நேரத்தில் தண்ணீர் ஊற்றினால் அது ஈர்ப்பதத்தை உறிஞ்சு விடும். ஆகவே இவற்றை தடுப்பது நல்லது.

டிப்ஸ்- 5:

இவற்றை எல்லாம் செய்தும் ரோஜா பூ செடி  துளிர் விடவில்லை என்றால் இத்தகைய டிப்ஸினை செய்யுங்கள். அதற்கு முதலில் 1 ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கலந்து.கொள்ளுங்கள்.

பிறகு துளிர் விடாத செடியின் நுனி பகுதியில் சிறிதளவு நறுக்கி விட்டு பின்பு அதன் மேலே மஞ்சளை அப்ளை செய்து விடுங்கள். மேலும் அதில் 2 இலைகளை நறுக்கி விடுங்கள்.

ஆகவே மேலே சொல்லப்பட்டுள்ள டிப்ஸினை எல்லாம் செய்து விட்டு சரியான உரம் அளித்து வருவதன் மூலம் ரோஜா செடி செழிப்பாக வளர்ந்து பூக்கள் அதிகாமாக பூக்கும்.

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 

 

Advertisement