பூக்காத ரோஜா செடியிலும் அதிக பூக்கள் பூத்து குலுங்க ஒரே 1 கிளாஸ் இதை ஊற்றுங்கள் போதும்

Advertisement

Roja Poo Sedi Athiga Pookal Pooka Tips in Tamil

நமது முன்னோர்களின் காலத்தில் இருந்து தாவரங்கள் வளர்ப்பது என்பது ஒரு தனித்துவமான கலையாகவே உள்ளது. அதனால் நமக்கும் தாவரங்கள் வளர்ப்பது என்பதில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். அதனால் நாம் அனைவருமே ஒரு சிறிய அளவிலான தோட்டம் அல்லது மாடித்தோட்டத்தை அமைத்து தாவரங்களை வளர்த்து வருகின்றோம். அப்படி நாம் அனைவரின் தோட்டத்திலும் கண்டிப்பாக இடம் பெற்றிரும் ஒரு தாவரம் என்றால் அது ரோஜா பூச்செடி தான். ஏனென்றால் ரோஜா பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் வசிகரமாகவும் இருக்கும். அதனால் அதனை அனைவரும் விரும்பி தங்களது வீட்டில் வளர்ப்போம். அவ்வாறு நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் ரோஜா பூச்செடியில் பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கஷடப்படும். அதனால் தான் இன்றைய பதிவில் நீண்ட நாட்களாக பூக்காத ரோஜா பூச்செடியையும் பூத்து குலுங்க வைக்க உதவும் ஒரு குறிப்பினை அறிந்து கொள்வோம் வாங்க.. 

பூக்கவே பூக்காத செம்பருத்தி செடியிலும் கூடை கூடையாக பூக்கள் பூக்க வேர்க்கடலை மட்டும் போதும்

Natural Fertilizer for Rose Plant in Tamil:

Natural Fertilizer for Rose Plant in Tamil

பெண்களின் அழகிற்கு மேலும் அழகினை அளிக்கும் பெருமை பொதுவாக பூக்களுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக ஒரு சில பூக்களை பெண்கள் மிகவும் விரும்பி சூடி கொள்வார்கள்.

அப்படி பலரும் விரும்பி சூடி கொள்ளும் பூக்களில் ஒன்று தான் இந்த ரோஜா பூக்களும். அதனால் இதனை பலரும் தங்களின் வீட்டில் விரும்பி வளர்ப்பார்கள். அப்படி நாம் விரும்பி வளர்க்கும் ரோஜா பூ செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்:

  1. டீ தண்ணீர் – 1 கப் 
  2. அரிசி கழுவிய தண்ணீர் – 1 கப் 
  3. வெங்காய தோல் – 1 கைப்பிடி அளவு 
  4. முட்டை ஓடு – 2 
  5. வாழைப்பழத்தோல் – 4
  6. தண்ணீர் – 2 கப் 

பூக்காத முல்லை பூச்செடியும் இதை ஒரு முறை ஊற்றினால் காடு போல் பூக்கும்

பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் டீ தண்ணீர், 1 கப் அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் 2 கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

வெங்காய தோலினை சேர்க்கவும்:

பிறகு அதில் நாம் எடுத்து வைத்திருந்த 1 கைப்பிடி அளவு வெங்காய தோலினையும் சேர்த்து கொள்ளுங்கள்.

முட்டை ஓடினை சேர்த்து கொள்ளுங்கள்:

அடுத்து அதில் 2 முட்டை ஓடினை நன்கு பொடியாக செய்து சேர்த்து கொதிக்க விடுங்கள்.

இதை மட்டும் ஊற்றினால் நீண்ட நாட்களாக பூக்காத மல்லிப்பூ செடியில் கூட கொத்து கொத்தாக பூக்கள் பூக்கும்

வாழைப்பழத் தோலினை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 வாழைப்பழத் தோலினையும் பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். பிறகு அதனை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.

இது நன்கு குளிர்ந்த உடன் இதிலிருந்து ஒரே ஒரு கிளாஸ் எடுத்து உங்களின் ரோஜா பூச்செடியின் வேர்களில் ஊற்றி கொள்ளுங்கள். இதனை தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று முறை என தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்களின் ரோஜா பூச்செடி கூடை கூடையாக பூக்க ஆரம்பிக்கும்.

மாமரத்தில் உள்ள பூக்கள் அனைத்தும் காய்களாக மாற இந்த கரைசலை மட்டும் கொடுங்கள் போதும்

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement