ரோஜா செடி வளர உரம்
பெரும்பாலானவர்களுக்கு செடி வளர்ப்பது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அதில் சில பேருக்கு பூச்செடி வளர்க்க பிடிக்கும், சிலருக்கு காய்கறிகள் வளர்ப்பது பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனைகள் இருக்கும். அதில் பெரும்பாலானவர்களுக்கு ரோஜா செடி வளர்ப்பது பிடிக்கும். சாலையோரங்களில் ரோஜா செடிகளை பார்த்தாலே வாங்கி வந்து விடுவார்கள். அப்படி நீங்க வாங்கிட்டு வர கூடிய ரோஜா செடியில் ரோஜாக்கள் பூத்து குலுங்க என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டிருப்பீர்கள். அதற்கு ஒரே ஒரு உரம் மட்டும் போதும். அது என்ன உரம் என்னவென்று இந்த முழு பதிவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
உரம்:
எந்த ஒரு செடி வளர்வதற்கும் உரம் தான் ரொம்ப முக்கியமாக இருக்கிறது. ஏனென்றால் உரம் தான் அதன் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கிறது. அப்படி இருக்கையில் நீங்கள் வீட்டில் வைத்து வளர்க்க கூடிய முக்கிய செடியாக இருப்பது தான் ரோஜா. இந்த ரோஜா செடிக்கு என்ன மாதிரியான உரத்தை கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
இயற்கை உரம் வகைகள் | இயற்கை உரம் தயாரிப்பு
உரத்திற்கு தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை பழத்தோல்- 3
- உருளைக்கிழங்கு-3
- தண்ணீர்-தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை எடுத்து சின்ன சின்னதாக நறுக்கி கொள்ள வேண்டும். சாதனை கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூண்டு நாட்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
அதன் பிறகு எலுமிச்சை தோலை நைசாக கட் செய்து இத்தனையும் கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் சேர்த்து மூன்று நாட்களுக்கு ஊற விட வேண்டும்.
3 நாட்களுக்கு பிறகு ஒரு பெரிய வாலியை எடுத்து கொள்ள வேண்டும். இந்த வாளியில் 2 லிட்டர் சுத்தமான தண்ணீரை ஊற்றி கொள்ள வேண்டும். பிறகு ஊற வாய்த்த உருளைக்கிக்கிழங்கு மற்றும் எலுமிச்சை தண்ணீரை இதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்த கலவையினை வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
இந்த தண்ணீரை 30 மில்லி லிட்டர் அளவில் ரோஜா செடியின் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். இந்த உரத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த திரவத்தை ஊற்ற வேண்டும். இந்த உரத்தை மாதத்திற்கு 2 முறை ஊற்ற வேண்டும். இரண்டாவது முறை ரோஜா செடிக்கு தண்ணீரை ஊற்றும் போது அதனுடன் பேக்கிங் சோடாவை இந்த தண்ணீரில் சேர்த்து செடியின் மேலே தெளித்து விட வேண்டும். இப்படி செய்வதால் ரோஜா செடி துளிர்விட்டு போது குலுங்கும்.
எலுமிச்சை தோல் மற்றும் உருளைக்கிழங்கு கம்போஸ்டின் நன்மைகள்:
கவனிக்க வேண்டியவை:
இந்த உரத்தை போட்டால் ரோஜா செடி பூத்து குலுங்கும் என்பதற்காக அதனை அடிக்கடி பயன்படுத்த கூடாது. ஏனென்றால் எலுமிச்சையானது மண்ணின் அமிலத்தன்மையை அதிகரிக்க செய்யும்.
உரம் பெயர்கள்,உரம் வகைகள், உரம் பயன்கள்..!
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |