நட்டு வைத்த 7 நாட்களில் ரோஜா செடியில் பூக்கள் பூக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Roja Sedi Valarpathu Eppadi Tamil

இன்றைய சூழலில் நாம் அனைவரின் வீட்டிலேயும் சிறிய அளவிலான தோட்டம் அல்லது மாடித்தோட்டத்தை அமைத்து தாவரங்களை வளர்த்து வருகின்றோம். அப்படி நமது வீடுகளில் உள்ள தோட்டத்தில் கண்டிப்பாக இடப்பெற்றுள்ள செடிகளில் ரோஜா பூச்செடியும் ஒன்று. ஆம் நண்பர்களே ரோஜா பூச்செடி இல்லாதா ஒரு தோட்டத்தை கூட இன்றைய சூழலில் காணமுடியாது. அப்படி அனைவராலும் மிகவும் விரும்பி வளர்க்கப்படும் ரோஜா செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நாம் அனைவருக்குமே மிகவும் வருத்தமாக இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் நமது வீடுகளில் உள்ள ரோஜா செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க.. 

வெறும் 3 நாட்களில் காய்ந்த ஜாதி மல்லி செடியிலும் பூக்கள் பூத்து குலுங்க பீட்ரூட் மட்டும் போதும்

ரோஜா செடி அதிகம் பூக்க:

Roja chedi valarpathu eppadi tamil

பொதுவாக நாம அனைவருக்குமே பூச்செடி வளர்ப்பது என்றால் மிக மிக பிடிக்கும். அதிலும் இந்த ரோஜா பூச்செடி என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே மிகவும் விரும்பி தங்களது வீடுகளில் வளர்ப்பார்கள்.

அப்படி நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் ரோஜா பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு காணலாம் வாங்க..

குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:

  1. தண்ணீர் – 1 லிட்டர் 
  2. மஞ்சள்தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. சாதம் வடித்த தண்ணீர் – 1 லிட்டர் 
  4. டீ தூள் – 1 கைப்பிடி அளவு 

3 நாட்களில் செம்பருத்தி செடி துளிர்விட்டு மொட்டுகள் வைக்க இதை ட்ரை பண்ணுங்க

செய்முறை:

Roja chedi valarpathu eppadi

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் தண்ணீர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

பின்னர் இதனுடன் நமது வீடுகளை நாம் பயன்படுத்திவிட்டு தேவையில்லாமல் இருக்கும் டீ தூளில் இருந்து 1 கைப்பிடி அளவு சேர்த்து கொள்ளுங்கள். பிறகு இதனை 8 மணிநேரம் அப்படியே இருக்க விடுங்கள்.

அதன் பிறகு இதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் சாதம் வடித்த தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து உங்கள் வீட்டின் ரோஜா பூச்செடியின் வேர்களில் ஊற்றுங்கள்.

இதனை வாரம் 1 முறை அல்லது 2 முறை என தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் ரோஜா செடியில் அதிக பூக்கள் பூக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

5 நாட்களில் ரோஜா செடியிலிருந்து அதிக பூக்கள் பூப்பதற்கு இதை மட்டும் செய்யுங்க

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்
Advertisement