5 நாட்களில் ரோஜா செடியிலிருந்து அதிக பூக்கள் பூப்பதற்கு இதை மட்டும் செய்யுங்க..

Advertisement

ரோஜா செடி வளர்ப்பது எப்படி.?

இந்த உலகில் மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவருக்கும் பூக்கள் என்றால் பிடிக்கும். அதில் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் ரோஜா பூவை பிடிக்கும். இதனால் பெரும்பாலானவர்கள் தங்களின் வீட்டில் ரோஜா செடிகளை வளர்க்கின்றார்கள். ஆனால் சில பேர் வளர்க்கும் செடியானது பூக்கள் அதிகமாக பூக்கும், ஆனால் சில வைத்த பூச்செடியிலிருந்து பூக்கள் பூக்காது, அதுமட்டுமில்லாமல் வளரவும் வளராது. அதனால் தான் இந்த பதிவில் இயற்கையான முறையில் ரோஜா செடி வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ரோஜா செடி வளர்க்கும் முறை:

மண் கலவை:

ரோஜா செடி வளர்ப்பதற்கு உகந்த மண்ணாக செம்மண் இருக்கிறது. மேலும் ரோஜா செடியை மண் தொட்டியில் தான் வளர்க்க வேண்டும். இந்த மண் கலவையில் சிறிதளவு மண்புழு உரத்தையும் இட வேண்டும். இந்த உரத்தை இடுவதால் அதிக பூக்கள் பூப்பதற்கு உதவி செய்கிறது.

உரம் செய்வது எப்படி.? 

ரோஜா செடி வளர்ப்பது எப்படி

உரம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  •  டீத் தூள்
  • காபி தூள்
  • முட்டை ஓடு
  • வாழைப்பழத் தோல்

ரோஜா செடி அதிக பூக்களுடன் பூத்து குலுங்க ஒரே ஒரு கிளாஸ் இதை ஊற்றுங்க போதும்

உங்கள் வீட்டில் பயன்படுத்திய டீத் தூள், காபி தூள், முட்டை ஓடு, வாழைப்பழத் தோல் போன்றவற்றை எடுத்து கொள்ளவும்.

முட்டை ஓட்டினை பொடியாக அரைத்து கொள்ளவும், இதனுடன் டீ தூள், காபி தூள், வாழைப்பழ தோல் போன்றவற்றை ஒரு பக்கெட் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இதை மூன்று நாட்களுக்கு அப்படியே விடவும், ஆனால் தினமும் கலந்து விடவும்.

மூன்று நாட்கள் கழித்து இதிலிருந்து தண்ணீரை மட்டும் எடுத்து ரோஜா செடிக்கு அதிகாலையில் ஊற்ற வேண்டும். இந்த தண்ணீரை தினமும் ஊற்றி வர வேண்டும்.

மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை மண்புழு உரத்தை இட வேண்டும்.

வாரத்தில் ஒரு ஒரு கப் தண்ணீரில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரை செடியின் வேர் பகுதியை ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பூச்சி பிரச்சனை இல்லாமல் விடுபடலாம்.

மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..

5 நாட்களில் செம்பருத்தி செடியிலிருந்து அதிக பூக்கள் பூப்பதற்கு இதை மட்டும் செய்யுங்க

நட்டு வைத்த 7 நாட்களில் ரோஜா செடியில் பூக்கள் பூக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்

 

Advertisement