7 நாட்களிலே பூக்காத ரோஜா செடியும் துளிர்விட்டு பூக்கள் பூக்க இதை மட்டும் செய்யுங்க..!

Advertisement

ரோஜா செடி வளர்ப்பது எப்படி.?

பொதுவாக வீட்டை அழகுபடுத்துவதற்காக பூச்செடிகளை வளர்ப்பார்கள். பெரும்பாலானவர்கள் வீட்டில் ரோஜா செடி இருக்கும். சிலர் வைத்த உடனே செடிகள் வளர்ந்து விடும். ஆனால் சில பேர் வைக்கின்ற செடியானது எப்படி தான் பராமரித்தாலும் அதிலிருந்து எந்த விதமான ரிசல்ட்டையும் கிடைக்காது. அதனால் இன்றைய பதிவில் கூறியுள்ளது போல ரோஜா செடிகளை பராமரித்தால் 7 நாட்களில் ரோஜா செடியிலிருந்து பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும். அதனால் இந்த பதிவை முழுமையாக படுத்து தெரிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ரோஜா செடி வளர்ப்பு முறை:

ரோஜா செடி வளர்வதற்கு முக்கியமாக இருப்பது மண் கலவை தான். அதனால் நீங்கள் ரோஜா செடி வைக்கும் இடத்தில் மண் கலவையானது பாதி அளவு அதான் இருக்க வேண்டும். 30% தொழு உரம், 20% தேங்காய் நாரை காய வைத்து பொடியாக எடுத்து கொள்ளவும். அதனுடன் சிறிதளவு வேப்ப புண்ணாக்கினையும் சேர்த்து கலந்து கொள்ளவும். அதன் பிறகு இதில் ரோஜா செடிகளை நட வேண்டும். இப்படி நடுவதால் பூச்சி பிரச்சனை இல்லாமல் செடிகள் ஆரோக்கியமாக வளரும்.

செடிகளின் இடத்தை மாற்ற வேண்டாம்:

roja sedi valarpu in tamil

ரோஜா செடியை நட்ட பிறகு சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைக்க வேண்டும். அடிக்கடி இடத்தை மாற்றாமல் ஒரே இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.

தண்ணீர் ஊற்ற வேண்டும்:

தினமும் ரோஜா செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும், அப்படி உங்க ஊரில் தண்ணீர் கிடைப்பது அரிது என்றால் வாரத்திற்கு ஒரு முறையாவது தண்ணீர் ஊற்றுவது அவசியம்.

அதிக பூக்கள் பூப்பதற்கு உரம்:

முட்டை ஓடு, வெங்காய தோல், காய்கறி கழிவு இவை மூன்றையும் தண்ணீரில் சேர்த்து மூன்று நாட்கள் ஊற விடவும். மூன்று நாட்கள் கழித்து தண்ணீரை மட்டும் ரோஜா செடியில் ஊற்ற வேண்டும். இந்த தண்ணீரை வாரத்திற்கு ஒரு முறை கொடுத்தால் போதுமானது.

பூக்களின் நிறம் அதிகரிக்க உரம்:

டீ தூள், பீட்ரூட் தோல், தர்பூசணி தூள் இவை மூன்றையும் ஒரு பக்கெட் தண்ணீரில் சேர்த்து ஊற விடவும். மூன்று நாட்கள் கழித்து தண்ணீரை,மட்டும் ரோஜா செடிக்கு கொடுக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை கொடுத்தால் செடிகளில் உள்ள பூக்களானது அடர்த்தியாக இருக்கும்.

மண்ணை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்து கொள்வது அவசியமானது. அப்போது தான் ரோஜா செடியில் அதிக பூக்கள் போது குலுங்கும்.

செடிகளை வெட்டி விட வேண்டும்:

ரோஜா செடியில் உள்ள கிளைகளை வருடத்திற்கு ஒரு முறை வெட்டி விட வேண்டும். இது போல செய்வதினால் செடிகள் நன்றாக வளர்வதற்கு உதவுகிறது.

புதிதாக நட்ட ரோஜா செடிகள் சீக்கிரம் துளிர்விட இத பண்ணலாமா…

செம்பருத்தி செடியில் 7 நாட்களில் பூக்கள் தாறுமாறாக பூக்க இத Try பண்ணி பாருங்க…..

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இயற்கை விவசாயம்

 

Advertisement